Published:Updated:

சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)

சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)
சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)

டெல்லி: டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டை இன்று பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)

கிழக்கு டெல்லி காந்தி நகரில் உள்ள குடியிருப்பில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தை பா.ஜ.க. மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முழக்கமி்ட்டனர்.

சோனியா வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் (படங்கள்)

சோனியா காந்தி வீடு முற்றுகை போராட்டத்தால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.