Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கான போராட்ட குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

கடந்த மாதம் 23ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியான விஷவாயு தூத்துக்குடி நகர் மக்களுக்கு பெரிய துன்பத்தை கொடுத்ததை தொடர்ந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்பரூபம் எடுத்தன.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின் பேரில் ஆலை தற்போது மூடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது ஆலை நிர்வாகம்.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

‘நூறு கோடி ரூபாயை பிணைய தொகையாக மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும். அதிலிருந்து வரக்கூடிய வட்டியை கொண்டு மக்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும்’ என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உண்ணாவிரதம் (படங்கள்)

பசுமைத் தீர்ப்பாயம் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது. மிக விரைவில் ஆலையை ஆய்வு செய்யும் இந்த குழு வரும் 29ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.

##~~##
இந்த நிலையில் ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என வலியுறுத்தி  ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கான போராட்ட குழு சார்பில் இன்று தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்:
ஏ.சிதம்பரம்