Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் கட்டமாக ஆய்வு!

ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் கட்டமாக ஆய்வு!
ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் கட்டமாக ஆய்வு!

தூத்துக்குடி: பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் அமைக்கப்பட்ட நான்கு பேர்கள் கொண்ட குழு இன்றும், நாளையும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்துகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் கட்டமாக ஆய்வு!

ஆரம்பிக்கப்பட்டது முதல், எத்தனையோ போராட்டங்களையும் எதிர்கொண்டு இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு பிறகு எதிர்ப்பு குரல் ஒட்டுமொத்தமாக கிளம்பியது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டது.

அதன்பிறகு ஆலை நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. பசுமைத் தீர்ப்பாயம் நான்கு பேர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஆலையை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சாய், லெஜிபிலீப், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மோகன் நாயுடு, ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சுமதி ஆகியோர் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டது.

##~~##
இந்த குழு கடந்த 24ஆம் தேதி முதல்கட்ட ஆய்வினை நடத்தியது. ஆலை இயங்கினால்தான் முழுமையாக ஆய்வு செய்ய முடியும் என முடிவு செய்த அந்த குழு, இரண்டு நாட்களாக ஆலையை இயங்க செய்துவிட்டு இன்று இரண்டாம் கட்ட ஆய்வில் இறங்கியிருக்கிறது.
இன்று ஒருநாள் முழுவதும் செய்யும் இந்த குழு, முழுமையாக ஆய்வு முடிவடைந்தால் இன்றோடு ஆய்வு முடியும் அல்லது நாளையும் ஆய்வு நடைபெறும். ஆய்வு முடிந்தவுடனேயே அறிக்கை தயார் செய்து நாளை மறுநாள் அதாவது 29ஆம் தேதி பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க இருக்கிறது. அறிக்கையின் தன்மையை பொறுத்து பசுமைத் தீர்ப்பாயம் தனது முடிவை அறிவிக்கும்.
எஸ்.சரவணப்பெருமாள்