Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது: நாளை அறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது: நாளை அறிக்கை தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது: நாளை அறிக்கை தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது: நாளை அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்  2வது நாளாக மேற் கொண்ட ஆய்வை நான்கு பேர்கள் கொண்ட குழு இன்று முடித்துக் கொண்டது. இதன் அறிக்கையை நாளை பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த குழு தாக்கல் செய்ய உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு பிறகு எதிர்ப்பு குரல் ஒட்டுமொத்தமாக கிளம்பியது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டது.

அதன்பிறகு ஆலை நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. பசுமைத் தீர்ப்பாயம் நான்கு பேர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஆலையை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சாய், லெஜிபிலீப், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மோகன் நாயுடு, ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சுமதி ஆகியோர் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டது.

##~~##
இந்த குழு கடந்த 24ஆம் தேதி முதல்கட்ட ஆய்வினை நடத்தியது. ஆலை இயங்கினால்தான் முழுமையாக ஆய்வு செய்ய முடியும் என முடிவு செய்த அந்த குழு, இரண்டு நாட்களாக ஆலையை இயங்க செய்துவிட்டு நேற்று இரண்டாம் கட்ட ஆய்வில் இறங்கியது. இந்த ஆய்வு பணியை இன்று 2.15 மணியளவில் முடித்துக்கொண்டு அந்த குழுவினர் வெளியே வந்தனர்.
ஆய்வு குறித்த அறிக்கையை நாளை 29ஆம் தேதி பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க இருக்கிறார்கள். காலை 10 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
அறிக்கையின் தன்மையை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? அல்லது மூடலாமா? என்பதை பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுக்கும்.
எஸ்.சரவணப்பெருமாள்