Published:Updated:

சஜ்ஜன் குமார் விடுவிப்பு: சோனியா வீட்டு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

புதுடெல்லி: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலிருந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோனியா காந்தி வீட்டு முன்பு சீக்கியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட 3 வழக்குகளில், ஒன்றிலிருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் நேற்றுமுன் தினம் உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

##~~##
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சீக்கியர்களின் போராட்டத்தை அடுத்து மத்திய டெல்லியில் முக்கிய பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டது.