‘‘உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக, கடலுக்குள் 8 கி.மீ தூரத்துக்குப் பாலம் கட்டி இறங்கு தளம் அமைக்கப்படுவதால் பல சீரழிவுகள் ஏற்படும். இதற்காக அமைக்கப்படும் தூண்களால், பவளப்பாறைகள் அழியும். சரக்குக் கப்பல்களின் வருகையால் படகுகள் சேதமாகும், வலைகளும் அறுபடும். கடலில் கலக்கும் நிலக்கரித் துகள்களால் கடல் மாசுபடும், மீன்வளமும் அழியும். கடல் தொழிலை நம்பி 3,000 நாட்டுப் படகுகள் இயக்கப்படுகின்றன. இவற்றைச் சார்ந்து 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று கவலையுடன் சொல்கிறார், கல்லாமொழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பயஸ்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.8,694 கோடி மதிப்பீட்டில் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்களை அமைக்க, 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. மத்திய அரசின் உதவியுடன் அந்தப் பணிகள் நடை பெற்றன. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 2013-ம் ஆண்டு இத்திட்டத்தை மாற்றி, மத்திய அரசின் உதவியில்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியமே இதைத் தனித்துச் செயல்படுத்தும் என அறிவித்தார். இதற்காக விடப்பட்ட டெண்டரில் பெல் நிறுவனமும், இந்தோ-சீனா கான்சார்டியம் நிறுவனமும் விண்ணப்பித்தன. ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய ரூ.7.376 கோடி செலவாகும் என்று சீன நிறுவனமும், ரூ.7.480 கோடி செலவாகும் என்று பெல் நிறுவனமும் குறிப்பிட்டிருந்தன. பெல் நிறுவனம் இதற்கான தொகையில் 75 சதவிகிதத்தையும், சீன நிறுவனம் 85 சதவிகிதத்தையும் கடனாகத் தர முன்வந்தன. பல நிலைகளில் பெல் நிறுவனத்தைவிட சீன நிறுவனத்தின் விலைப்புள்ளி குறைவாகவே இருந்தது. ஆனால், குறைபாடுகள் இருப்பதாகக்கூறி, இரண்டு டெண்டர்களுமே ரத்து செய்யப்பட்டன. டெண்டர் தொடர்பாக சீன நிறுவனத்துடன் அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார். ‘‘பேரம் படியாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், அதனால் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் மின் வாரியம் பல கோடி ரூபாய் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும்’’ என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை, ஜனவரி 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளியில் தொடங்கி வைத்தார். ரூ.10,615 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இரண்டு அலகுகளின் உற்பத்தித்திறன் 1,320 மெகாவாட். ஒவ்வோர் அலகும் 660 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உடையது. இந்தத் திட்டத்துக்காக, பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி (ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன்) கடன் வழங்கியுள்ளது. இந்த அனல்மின் நிலையத்துக்காக திருச்செந்தூர் அருகில் உள்ள கல்லாமொழி மீனவ கிராமத்தில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால், மீன்வளம் அழிவதோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என மீனவர்கள் குற்றம்சாட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

26 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் செப்டம்பர் 17-ம் தேதி 256 நாட்டுப் படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டிக்கொண்டு கடல்வழியாக வந்து, இறங்கு தளம் அமைக்கப்பட்டுவரும் பகுதியை முற்றுகையிட்டனர். பெண்களும் கடற்கரையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அதிகமானோர் மீனவர்கள்தான். எனவே, கடல்வழி முற்றுகைப் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்று கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டக் கட்டுமர - நாட்டுப் படகுகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியூட்டன் ஃபர்னாண்டோ, ‘‘மத்திய அரசின் கடல் மேலாண்மை மண்டலப் பகுதியாக கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 365 கி.மீ கடற்கரை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்கரையில் 500 மீட்டர் தூரம் வரையிலும், கடலில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரை எந்தவிதக் கட்டுமானமும் அமைக்கக் கூடாது. இந்த விதி இருக்கும் நிலையில், இங்கு இறங்கு தளம் அமைப்பது சட்டவிரோதமானது. கடலில் பாலம் அமைப்பதைத் தவிர்த்துவிட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்து, லாரிகள் மூலம் கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாக அதைக் கொண்டுவரலாம். ஆங்கிலேயர்கள் காலத்தில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அதைப் புதுப்பித்து, அதன் மூலம் நிலக்கரி எடுத்து வரலாம்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். ‘‘உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுவரும் இந்த நிலக்கரி இறங்கு தளம் மிக முக்கியமானது. இது குறித்து மூன்று முறை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதனால், மீன்பிடித் தொழிலுக்கும் மீன்வளத்துக்கும் பாதிப்புகள் இல்லை என்பதை விளக்கியுள்ளோம். மீனவர்களின் புகார்கள், கருத்துகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மீனவர்களைப் பாதிக்காமல் திட்டங்களைச் செயல்படுத்துங்கள் ஆட்சியாளர்களே.

- இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்