Published:Updated:

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை
`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

வேலை வாய்ப்பு இல்லாததால் வாழ்க்கையைக் கடக்க ஒவ்வொரு விநாடியையும் எண்ணிக்கொண்டே இருக்கிறோம் எனப் பட்டாசு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

பட்டாசு பயன்பாடு தொடர்பாகக் கடந்த அக்டோபர் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதில்,பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடி பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உத்தரவிட்டது. இந்தக் கட்டுப்பாட்டால் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள சுமார் 8 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

பட்டாசு தொழில் மற்றும் உபதொழில்களை நம்பியுள்ள சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டாசுத் தொழிலாளர்கள் கடந்த 18-ம் தேதி தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். பின்னர், தாங்கள் அறிவித்தது போல இன்று காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். 12,000-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், பொதுமக்களின் பிரதிநிதிகள் சார்பில் தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

``இன்னக்கி காலைல குழந்தைக்கு என்னால் ஒரு ரூபா கொடுக்க முடியல. எங்களுக்கு பட்டாசுத் தொழில் மட்டும்தான் இருக்கு. விவசாயமோ, வேற தொழிலோ செய்யலாம்னு பார்த்தா, எங்க பகுதியில விவசாயமே அழிஞ்சு போச்சு. வேற தொழில் இல்லையே. நாங்க என்னதான் செய்யறது? பட்டாசு ஆலையால இவ்வளவு பிரச்சன இருக்குனு சொன்னா, 80 வருஷத்துக்கு முன்னாடி எதுக்கு பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுத்தாங்க? இப்போ சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். அரிசி இல்லாம எப்படிச் சமைக்க முடியாதோ, அதுபோலதான் பச்சை உப்பு இல்லாம பட்டாசு தயாரிக்க முடியாது’’ என்றார் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முனியம்மாள் கண்ணீரோடு.

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

``வீட்ல இருக்க எல்லோருமே பட்டாசுத் தொழில நம்பித்தான் இருக்கோம். நாங்க வேட்டு சுத்தியாச்சும் பிள்ளைகள படிக்க வைக்கணும்னு நினைச்சோம். ஆனா, இப்போ எங்களுக்கு வேலை இல்லாததால 12-ம் வகுப்பு முடிச்சிருக்க என் பையன அவன் எவ்வளவோ கெஞ்சியும்கூட காலேஜூக்கு அனுப்ப முடியாம வேலைக்கு அனுப்பிக்கிட்டு இருக்கோம். பட்டாசு வேலை இல்லாததால பிள்ளைகளக்கூட படிக்க வைக்க முடியலயேனு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு. எங்கள யாரும் கண்டுக்கிறதில்ல. இன்னும் 10 நாள்ல நல்ல முடிவு கிடைக்கும்னு சொல்றாங்க. அவங்க நாள எண்ணிக்கிட்டு இருக்காங்க. நாங்க அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்றதுனு ஒவ்வொரு விநாடியும் எண்ணிக்கிட்டு இருக்கோம்’’ என்றார் சிவகாசியைச் சேர்ந்த தனலட்சுமி.

`அடுத்தவேளை சாப்பாட்ட நெனச்சு ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்!’ - பட்டாசுத் தொழிலாளர்கள் வேதனை

``விருதுநகர் மாவட்டத்தில பட்டாச விட்டா வேற தொழில் இல்லீங்க. குட்டி ஜப்பானோட நிலைமை இன்னிக்கு இப்படி மோசமாகிடுச்சு. குடும்பச் செலவுக்குக்கூட பணம் இல்ல. வட்டிக்குக் கேட்டா வேலை இல்லாத உன்ன நம்பி எப்படிப் பணம் தர முடியும்னு கேட்டு தர மாட்றாங்க. நாங்க எப்படிப் பிழைப்ப நடத்துறதுனே தெரியல. ஒவ்வொரு வருசமும் இதே மாதிரிதான் நடக்குது. எங்க பொழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன செய்றதுன்னே தெரியல’’ என்றார் வெற்றிலையூரணியைச் சேர்ந்த மணி. பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.