Published:Updated:

மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்

புதுடெல்லி: மாசு வெளியேற்ற விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலையை கடைபிடிப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் புகார் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை தொடர்ந்து ஆலைக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மாசுவைக் கட்டுப்படுத்த

##~~##
போதுமான வசதிகள் இருப்பதாகக் கூறியது.

ஆனால், 2013 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மனுவில், ஆலையில் விஷ வாயு வெளியேற வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என்று இருவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளது" என்று குற்றம்சாட்டினார்.