Published:Updated:

பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் ஆலை புகார்

பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் ஆலை புகார்
பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் ஆலை புகார்

புதுடில்லி: டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் ஆலை புகார் தெரிவித்துள்ளது.

##~~##
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு வெளியாகியதால், பொதுமக்கள், குழந்தைகள் பலரும் மயக்கமடைந்தனர். பல செடி, மரங்களும் கருகிப் போயின. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு தற்போது, டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையின் போது வாதிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம், ''கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் மாசுவை கட்டுப்படுத்த போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2013 ஏப்ரலில் தாக்கல் செய்த மனுவில், ஆலையில் விஷவாயு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசு முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது'' என குற்றம் சாட்டப்பட்டது.