Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள  தேசிய பசுமை முதன்மைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அனைத்து தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்தது.

இதையடுத்து இன்று தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனையுடன் ஆலையை இயக்கலாம் என்றும், வாயு வெளியேறியதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை எனவும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வைகோ அதிர்ச்சி


இதனிடையே அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்

 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

வைகோ,"ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம், தமிழகத்தில் உள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த ஆணையத்தின் தீர்ப்பின் மீதுதான், பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் இருக்கின்றன என்று இந்தத் தீர்ப்பாயத்தில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன், அதுகுறித்து தீர்ப்பு ஆயம் தந்துள்ள பதில் விளக்கம் என்ன என்பதை தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தால்தான் தெரியும்.

தற்போது தீர்ப்பு ஆயம் ஆலையைத் திறக்குமாறும் அதற்கு முன் நேரில் கண்காணிக்க  ஒரு நிபுணர் குழுவையும் அறிவித்துள்ளது.

ஆலையின் இலாப நட்டத்தைப் பற்றியும் இந்தியாவுக்குக் கிடைக்கிற வருமானத்தைப் பற்றியும் தீர்ப்பு ஆயம் கூறி உள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலங்கள் தாமிர உற்பத்தியைப் பற்றி கருதாமல், ஆலையை அனுமதிக்கவில்லையே? தென் தமிழ்நாடுதான்

 
அதற்குப் பழி ஆவதா? நாட்டின் வருமானத்தைவிட மக்களின் உயிரும், உடல் நலமும் உன்னதமானது என்பதால் நச்சு புகை கக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடுகிறேன். நீதிக்கான போராட்டம். பொதுமக்களின் நல்வாழ்வுக்கான போராட்டம், எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடுவோம்.
##~~##
உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு சாதகமாக ஏப்ரல் 2 ஆம் தேதி தந்த தீர்ப்பை எதிர்த்து, நான் ஏற்கனவே சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன்.
எனவே, மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடுவேன். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எனது தர்ம யுத்தம் தொடரும்" என்று கூறியுள்ளார்.