Published:Updated:

 3 வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல், வீதிக்கு வந்து போராடிய மக்கள்! - காஷ்மீரில் இன்னொரு கத்துவா சம்பவம்

ஆ.சாந்தி கணேஷ்
 3 வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல், வீதிக்கு வந்து போராடிய மக்கள்! - காஷ்மீரில் இன்னொரு கத்துவா சம்பவம்
 3 வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல், வீதிக்கு வந்து போராடிய மக்கள்! - காஷ்மீரில் இன்னொரு கத்துவா சம்பவம்

'கத்துவா ஆசிஃபாவுக்கு நீங்கள் என்ன நீதி செய்தீர்கள்? அவளும் சிறுமிதானே. குற்றவாளிக்கு உடனடியாகத் தண்டனை வழங்காத அரசும் அரசு அதிகாரிகளும் வெட்கித் தலைகுனியுங்கள். குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்கிற மனோவியாதி கொண்டவர்களை நீங்கள் தண்டிக்காத வரை, இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கும்.' - நெருப்புத்துண்டங்களை ஒத்த இந்த வார்த்தைகளை முழங்கியபடி, 'பாலியல் வன்கொடுமைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'; 'பெண்கள் பொம்மைகள் அல்ல'; 'குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்'; 'நாங்கள் வெட்கப்படுகிறோம் மகள்களே... குற்றவாளிகள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்' என்ற பதாகைகளுடன், காஷ்மீரில் பெண்களும் ஆண்களும், ஏன் மாணவர்களும்கூட தெருவில் இறங்கி நேற்றைய தினம் போராடியிருக்கிறார்கள்.

 3 வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல், வீதிக்கு வந்து போராடிய மக்கள்! - காஷ்மீரில் இன்னொரு கத்துவா சம்பவம்

PC: thewire.in

காரணம், காஷ்மீர் பந்திப்போராவில் உள்ள சம்பல் என்ற இடத்தில், சென்ற வாரம் 3 வயது பெண் குழந்தையை, சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் கழிப்பறையில் கிடந்த அந்தக் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். குற்றவாளியும் கைது செய்யப்பட்டு விட்டான். குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருக்க, 'கைது செய்த குற்றவாளிக்கு உடனே தூக்குத்தண்டனையை நிறைவேற்று' என்று காஷ்மீரில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. போராட்டம் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியதால், பந்த், போலீஸ் பாதுகாப்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் காயமடைந்தது என்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. 

இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நாமெல்லாம் உற்றுக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. குடும்ப மானம், பாதிக்கப்பட்ட குழந்தை வளர்ந்த பிறகு, திருமணம் நடக்காது என்பது போன்ற பழைமை எண்ணங்களைச் சமூகம் தூக்கி வீசிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் இனி வீட்டுக்குள் ஒளிந்துகொண்டு அழ மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்காக வீதிக்கு வந்து நியாயம் கேட்க இந்தச் சமூகம் தயாராகிவிட்டது.

Vikatan