Published:Updated:

`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்

`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்
`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்

``தனியார் சிமென்ட் ஆலை ஏரியை அழித்துவிட்டு மலைபோல மண்ணைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பேசினால் ஆட்களை வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இனியும் நாங்கள் பொறுக்க மாட்டோம்'' எனப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள் விவசாயச் சங்கத்தினர்.

`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்

அரியலூர் மாவட்டம் சிமென்ட்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர். இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமென்ட், வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்

அரியலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டம், தற்போது வாழவே தகுதியில்லாத நகரமாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் இங்குள்ள சிமென்ட் ஆலைகளே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ``அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தில் தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இச்சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது பயன்படுத்த முடியாத தேவையற்ற மண் சுரங்கத்துக்கு அருகிலுள்ள வீராணம் ஏரியில் கொட்டப்பட்டது. இதனால் ஆறரை ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியை முழுவதும் ஆக்கிரமித்து தற்போது 50 அடிக்கும் மேலாக மலைக்குன்றுபோல் மண்ணானது குவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி இருந்ததற்கான அடையாளமே இல்லாத வகையில் அப்பகுதி உள்ளது. ஏரிக்குட்பட்ட பகுதியிலேயே கனரக வாகனங்கள் செல்ல மண்சாலையும் போடப்பட்டுள்ளது.

`மிரட்டுறாங்க, அதிகாரிங்க அமைதியா இருக்காங்க, இனியும் பொறுக்க மாட்டோம்!' - களமிறங்கும் விவசாயிகள்

இந்நிலையில் தனியார் சிமென்ட்  ஆலையால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்மேட்டின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நீர்நிலைகளில் சிமென்ட்  ஆலைகளால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்துக் கோஷமிட்டனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியாவை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Vikatan