Published:Updated:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 பேர் குழு ஆய்வு

விகடன் விமர்சனக்குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 பேர் குழு ஆய்வு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 பேர் குழு ஆய்வு

தூத்துக்குடி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 2 பேர் கொண்ட குழு இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 பேர் குழு ஆய்வு

கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு கசிந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து ஆலை நிர்வாகம், தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. பசுமை தீர்ப்பாயம் விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுப்பியது.

இந்நிலையில் டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள 2 பேராசிரியர்களும், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் உறுப்பினர்களைக் கொண்டும் குழு அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு போட்டது.

அதைத் தொடர்ந்து இன்று ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஹம்யோத்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர். மேலும் இந்த ஆலை இயங்கச் செய்து அப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆய்வறிக்கையின் முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா? மூடுவதா என தேசிய தீர்ப்பாயம் தீர்ப்பளிக்கும்.

தேசிய தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில், இன்று இரண்டு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சரவணபெருமாள்