Published:Updated:

தெலுங்கானாவிற்கு எதிராக 5 நாளாக நீடிக்கும் போராட்டம்!

தெலுங்கானாவிற்கு எதிராக 5 நாளாக நீடிக்கும் போராட்டம்!
தெலுங்கானாவிற்கு எதிராக 5 நாளாக நீடிக்கும் போராட்டம்!
தெலுங்கானாவிற்கு எதிராக 5 நாளாக நீடிக்கும் போராட்டம்!

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமந்திராவில் இன்று 5வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது.  இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது.

##~~##
இந்த போராட்டத்தால் பஸ்கள் ஓடவில்லை. இதனால், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.