Published:Updated:

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: முதல்வர் கிரண்குமார் ரெட்டி டெல்லியில் போராட்டம்!

புதுடெல்லி: ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கிரண்குமார் ரெட்டி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசின் மசோதாவை ஆந்திர சட்டமன்றம் நிராகரித்து திருப்பி அனுப்பியது. ஆனாலும், தனி தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நேற்று டெல்லியில் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

##~~##
அதன்படி இன்று காலை 10 மணியளவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
தர்ணா போராட்டத்தை தொடங்குவதற்கு முன் அவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஆந்திர சட்டசபை அனுமதி இல்லாமல் தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது சட்ட விரோத செயல் என்று புகார் அளிக்க உள்ளனர்.