Published:Updated:

டெல்லியில் தெலங்கானா ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளார்கள் பயங்கர மோதல்!

டெல்லியில் தெலங்கானா ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளார்கள் பயங்கர மோதல்!
டெல்லியில் தெலங்கானா ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளார்கள் பயங்கர மோதல்!
டெல்லியில் தெலங்கானா ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளார்கள் பயங்கர மோதல்!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன் தெலங்கானா ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா அமைப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

தனி தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதா கொண்டு வருவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இன்று சீமாந்திராவை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன.

##~~##
இதனிடையே, டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன் தெலங்கானா ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.