Published:Updated:

வாரணாசி கூட்டம்: பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!

Vikatan Correspondent
வாரணாசி கூட்டம்:  பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!
வாரணாசி கூட்டம்: பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!
வாரணாசி கூட்டம்:  பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாரணாசி/புதுடெல்லி: வாரணாசி கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் நடுநிலை தன்மையுடன் இல்லாமல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ள நிலையில்,பா.ஜனதாவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் வாரணாசியில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல்பாடு சரியானதே என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.

குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று பிரசார பொதுக் கூட்டம் நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் வாரணாசியில் பா.ஜ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர். பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹர்ஷவர்தன் தலைமையில் பா.ஜ.க.வினர் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

வாரணாசி கூட்டம்:  பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இன்று நடைபெறுவதாக இருந்த கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியை மேற்கொள்ள முடியாமல் போனதற்காக கங்கை மாதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாயின் அன்பு அரசியலுக்கு அற்பாற்பட்டது என்பது இந்த மக்களுக்கு தெரியும். அமைதி காக்க வேண்டும் எனவும், மக்களுக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் கட்சி நிர்வாகிகளையும் சகோதர, சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து அமைப்புக்களுக்கும் நடுநிலை தன்மையுடன் இல்லாமல் தேர்தல் ஆணையம் செயல்படுவது துரதிஷ்டவசமானது. இதன் காரணமாகவே எங்கள் கட்சியினர் சத்யாகிரக போராட்டம் செய்ய வேண்டியதாக உள்ளது" என்று தெரிவித்தார்

அனுமதி மறுப்பு சரியானதே: தலைமை தேர்தல் ஆணையர்

இதனிடையே வாரணாசியில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல்பாடு

வாரணாசி கூட்டம்:  பா.ஜனதா புகார்; தேர்தல் ஆணையம் விளக்கம்!

சரியானதே என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

ஆணைத்துக்கு எதிராக தேசியக் கட்சி ஒன்று போராட்டம் நடத்தியது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டம் வருத்தமளிப்பதாக உள்ளது. ஜனநாயக நாட்டில் புகார் கூற கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆணையத்தை விமர்சிக்கும்போது கட்சிகள் தங்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.

வாரணாசியில் நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல்பாடு சரியானதுதான். நியாயமான தேர்தலை நடத்தும் அதிகாரங்களை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது'' என்றார்..