Published:Updated:

லோக்பால் விவகாரம்: பிரதமருக்கு அண்ணா கடிதம்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, ஜூலை 19,2011

லோக்பால் விவகாரம்: பிரதமருக்கு அண்ணா கடிதம்

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஸாரே கடிதம் எழுதியுள்ளார். ##~~##

அரசின் மசோதா வரைவு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா வரைவு மிகவும் பலவீனமாகவும் கேலிக்கூத்தாகவும் உள்ளது.

அந்த மசோதாவின் பார்வை, ஒரு வரையறைக்குள் உள்ளது. சாதாரண மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்சினைகளுக்கு அம்மசோதா தீர்வு காணாது.

ஆகவே, அந்த மசோதாவில் உள்ள நிறைய ஓட்டைகளை நீங்கள் அடைக்க வேண்டும்.

அதே சமயத்தில், நாங்கள் தயாரித்துள்ள 'ஜன்லோக்பால்' மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல், நான் ஆகஸ்டு 16-ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்," என்று அந்தக் கடிதத்தில் அண்ணா கூறியுள்ளார்.