Published:Updated:

விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 7ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் பேரணி!

புதுடெல்லி : அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 7ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 7ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரும் 8 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டையும், வரும் 10ஆம் தேதி, பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் நாளான 7ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக காங்கிரசார் அறிவித்துள்ளனர்.