Published:Updated:

அண்ணா விடுதலையாக மறுப்பு: ஊழலுக்கு எதிரான போராட்டக்களமானது திகார்!

அண்ணா விடுதலையாக மறுப்பு: ஊழலுக்கு எதிரான போராட்டக்களமானது திகார்!
அண்ணா விடுதலையாக மறுப்பு: ஊழலுக்கு எதிரான போராட்டக்களமானது திகார்!

புதுடெல்லி, ஆக.17,2011

அண்ணா விடுதலையாக மறுப்பு: ஊழலுக்கு எதிரான போராட்டக்களமானது திகார்!

தமது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளும் வரை சிறையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்று அண்ணா ஹஜாரே உறுதியுடன் இருக்கும் நிலையில், திகார் சிறை வாசலே ஊழலுக்கு எதிரான போராட்டக்களமாகியுள்ளது.

அண்ணா ஹஜாரே குழுவின் ஆதரவாளர்கள் திகார் சிறைக்கு முன்பு குவிந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

வலுவான லோக்பால் மசோதா கோரி டெல்லியில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அண்ணா ஹஜாரே குழுவை டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து அண்ணா ஹஜாரே, சிசோதியா, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்ணா ஹஜாரே குழுவை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி நாடு தழுவிய அளவில் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன், திகார் சிறை முன்பும் அண்ணா ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். ##~~##

இந்த நெருக்குதல்களின் காரணமாக, அண்ணா ஹஜாரேவை விடுவித்தது மத்திய அரசு. அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்ணா பிடிவாதம்.. சிறையில் உண்ணாவிரதம்...

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக கிரண் பேடி, சாந்தி பூஷன், சிசோதியா உள்ளிட்ட அண்ணாவின் ஆதரவாளர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

அதேநேரத்தில், திகார் சிறையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர் அண்ணா ஹஜாரேவும், அரவிந்த் கேஜரிவாலும்.

வலுவான லோக்பால் மசோதாவுக்காக, ஜே.பி. பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவதற்கு நிபந்தனையற்ற அனுமதி என்ற உத்தரவாதத்தை தந்தால் மட்டுமே தாம் சிறையில் இருந்து வெளியேறுவேன் என்று அண்ணா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிறையில் அண்ணாவும் அரவிந்தும் 4 மணி நேரம் உறங்கினர். அவர்கள் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. இரவு முழுவதுமே திகார் சிறை முன்பு அண்ணா ஆதரவாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி குவிந்திருந்தனர்.

இன்று காலை தொடங்கி, திகார் சிறை வாசல் போராட்டக்களமாகவே மாறும் வகையில் 3000-க்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளனர்.

'அண்ணா சுதந்திரமாக போகலாம்..'

அண்ணா ஹஜாரே விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், அவர் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமென்றாலும் சுதந்திரமாக போகலாம் என்றும் உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

ஜே.பி. பூங்காவில் அண்ணா போராட்டம் நடத்த அனுமதிப்பது தொடர்பாக டெல்லி காவல்துறை ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு