Published:Updated:

டெல்லி போலீஸுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: திகார் சிறையிலேயே அண்ணா உண்ணாவிரதம்

டெல்லி போலீஸுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: திகார் சிறையிலேயே அண்ணா உண்ணாவிரதம்
டெல்லி போலீஸுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: திகார் சிறையிலேயே அண்ணா உண்ணாவிரதம்

புதுடெல்லி, ஆக.17,2011

டெல்லி போலீஸுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: திகார் சிறையிலேயே அண்ணா உண்ணாவிரதம்

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடம், கால அளவு தொடர்பாக அண்ணா ஹஜாரே குழுவுக்கும் டெல்லி காவல்துறைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. ##~~##

அண்ணா ஹஜாரே திகார் சிறையிலேயே தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக, அவரது நெருக்கமான ஆதரவாளர்களில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ராம்லீலாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து சிறையில் இருந்து அண்ணா ஹஜாரே வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், திகார் சிறை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு பேசிய கிரண் பேடி, "அண்ணா ஹஜாரே இப்போதைக்கு சிறையில் இருந்து வெளியேற மாட்டார். தாம் போராட்டம் நடத்த நிபந்தனையின்றி அனுமதி தரும் வரையில் தமது முடிவில் மாற்றமில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்துவிட்டார்.

ராம்லீலா மைதானத்தில் சில தினங்கள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி தருகிறது. இதற்கு நமது குழு ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என்றார் கிரண் பேடி.

டெல்லி காவல்துறை தரப்பில் 15 நாட்கள் வரை அனுமதிக்க முன்வந்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான அனுமதி வேண்டும் என அண்ணா தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள இந்தியா கேட்-டில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் குவிந்து மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு