Published:Updated:

என் ஆதரவாளர்களே எனது பலம் : வீடியோ செய்தியில் அண்ணா ஹஜாரே உற்சாகம்

என் ஆதரவாளர்களே எனது பலம் : வீடியோ செய்தியில் அண்ணா ஹஜாரே உற்சாகம்
என் ஆதரவாளர்களே எனது பலம் : வீடியோ செய்தியில் அண்ணா ஹஜாரே உற்சாகம்

புதுடெல்லி, ஆக.18,2011

என் ஆதரவாளர்களே எனது பலம் : வீடியோ செய்தியில் அண்ணா ஹஜாரே உற்சாகம்

தன் ஆதரவாளர்களே தனது பலம் என்று திகார் சிறையில் இருந்து அனுப்பிய விடியோ செய்தியில் சமூகப் போராளி அண்ணா ஹஜாரே உற்சாகத்துடன் கூறியுள்ளார். ##~~##

திகார் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் அண்ணா ஹஜாரே தன் ஆதரவாளர்களுக்காக பேசியுள்ள வீடியோ பதிவை கிரண் பேடி வியாழக்கிழமை வெளியிட்டார்.

அதில், மத்திய அரசு உடனடியாக திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அண்ணா ஹஜாரே வலியுறுத்தியுள்ளார்.

"என் ஆதரவாளர்களே எனது பலம். அவர்களால் தான் எனக்கு உத்வேகம் கிடைக்கிறது," என்று உற்சாகத்துடன் பேசியுள்ளார்.

"அரசிடம் இருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தேவை. நமது பணத்தை அவர்கள் காக்க வேண்டும்; இன்னொன்று, நல்ல சட்டங்களை உருவாக்க வேண்டும்.

அரசு நம்மை ஏமாற்றிவிட்டது. நமது மசோதா வரைவை அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

பிரதமரையும் கட்டுப்படுத்தும் வலிமைமிக்க லோக்பால் மசோதாதான் நம் நாட்டுக்கு தேவை. எனவே, நாம் தயாரித்துள்ள லோக்பால் மசோதா போல் வலுவான மசோதாவைதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

சிறந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் வரை எனக்கு ஓய்வு இல்லை. மக்களுக்கு நன்மை அளிக்கும் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை, என் ஆதரவாளர்களும் போராட வேண்டும். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை, நான் தொடர்ந்து போராடுவேன்," என்று அந்த வீடியோ செய்தியில் அண்ணா ஹஜாரே குறிப்பிட்டுள்ளார்.

கிரண் பேடி வெளியிட்ட அண்ணா ஹஜாரேவின் வீடியோ செய்தி...

அடுத்த கட்டுரைக்கு