Published:Updated:

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது: பழ.நெடுமாறன்

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது: பழ.நெடுமாறன்
இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது: பழ.நெடுமாறன்
இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது: பழ.நெடுமாறன்

திருவாரூர்: இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது என்று பழ.நெடுமாறன் கூறினார்.

திருவாரூரில் நடைபெற்ற தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் பழ.நெடுமாறன், ''தமிழக மீனவர்கள் பிரச்னையில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையிலான கட்சிகள் ஒரே நிலையைத்தான் பின்பற்றுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடுகளில் 5வது இடத்தில் உள்ள இந்தியா, ஒரு சிறிய நாடான இலங்கையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோதும், தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும்தான் இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதனால், தற்போது டெசோ என்ற அமைப்பின் மூலம் போராடுவதால் எந்த பலனும் கிடைக்காது.

காவிரி நீர் பிரச்னையில் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்தது. ஆனாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கிறார். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினால் டெல்டா மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ, இயக்கத்திற்கோ பாதிப்பு அல்ல என்பதை உணர்ந்து இந்த திட்டத்தை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம். தமிழக அரசு மீத்தேன் சோதனை, கிணறு தோண்டுவதற்காக போட்ட ஒப்பந்தம் 2015 ஜனவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மீண்டும் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க கூடாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கிற்காக தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அதற்கு ஏற்ப, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடக் கூடாது" என்றார்.