Published:Updated:

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும்: சொல்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்!

Vikatan Correspondent
ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும்: சொல்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்!
ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும்: சொல்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்!

மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும் என்று அலங்காநல்லூர் மக்கள் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும்: சொல்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் எங்கும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. குறிப்பாக உலகப்புகழ்ப் பெற்ற அலங்காநல்லூரிலும் இந்த விழா நடத்த அனுமதி இல்லாததால், தென்மாவட்ட மக்கள் பெரிதும் கவலை அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அலங்காநல்லூர் மக்கள் பொங்கலே கொண்டாடமால் தினமொரு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி
வருகிறார்கள்.

வழக்கப்படி ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரம், 16 ஆம் தேதி பாலமேடு, 17 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதால் அலங்காநல்லூரில் நேற்று கடையடைப்பு நடத்தி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் சாமி குத்தமாகிடும்: சொல்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்!

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால், சாமி குத்தமாகி ஊருக்கு கெடுதல் ஏற்படும் என்று அலங்காநல்லூர் மக்கள் பேச தொடங்கி உள்ளனர். இதற்கு ஏற்றாற்ப்போல் நேற்று மாலை வாடிவாசல் அருகிலிருக்கும் முனியாண்டி சாமி கோயிலில் இருக்கும் மரத்தில் திடீரென பால் வடிய ஆரம்பித்துள்ளது.

இதைப் பார்த்த மக்கள், சாமியின் கோபம்தான் மரத்தில் பாலாக வடிகிறது. அதனால், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் காவல் துறையினரோ, இது பல மரங்களில் இயல்பாக நடக்கும் விஷயம்தான் என்று சொன்னாலும், இல்லை இது சாமியின் உத்தரவுதான் அதனால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்று ஊர் மக்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

செ.சல்மான்

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்