Published:Updated:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பேரணி: காங். தொண்டர்கள் மீது தடியடி!

Vikatan Correspondent
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பேரணி: காங். தொண்டர்கள் மீது தடியடி!
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பேரணி: காங். தொண்டர்கள் மீது தடியடி!

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பேரணி: காங். தொண்டர்கள் மீது தடியடி!

கடந்த 10ஆம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலம், நெய்டா மாவட்டம், ராஜ்காட்டில் தொடங்கிய இந்த பேரணி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தை நோக்கி சென்றது. அப்போது திடீரென நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பேரணி: காங். தொண்டர்கள் மீது தடியடி!

இதையடுத்து, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். இருப்பினும், தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்தில் நுழைய இளைஞர் காங்கிரசார் முயன்றனர். இதனால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.