Published:Updated:

ஹஜாரே ஆதரவாளர்கள் மீது ராம் சேனாவினர் தாக்குதல்

Vikatan Correspondent
ஹஜாரே ஆதரவாளர்கள் மீது ராம் சேனாவினர் தாக்குதல்
ஹஜாரே ஆதரவாளர்கள் மீது ராம் சேனாவினர் தாக்குதல்

புதுடெல்லி, அக்.13,2011

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கப்பட்ட மறுநாளில், சமூக ஆர்வலர்கள் அண்ணா ஹஜாரேவின் ஆதாரவாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனது அலுவலக அறையில் நேற்று பிற்பகல் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனை இளைஞர்கள் மூவர் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராம் சேனா இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர் செய்தனர். நீதிமன்ற வளாகத்தில் அண்ணா ஹஜாரே ஆதரவாளர்களும் குவிந்திருந்தனர்.

அப்போது, ஹஜாரே ஆதரவாளர்களை ராம் சேனா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர். இதனை அங்கிருந்த போலீஸார் தடுக்க முயற்சி செய்தனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.