Published:Updated:

’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்
’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்

’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்

சென்னை: புகைப்படக்காரர் ஜெ.சுரேஷ் பல வருடங்களாக எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களின்  கண்காட்சியை, லலித்கலா அகாடமியில் கமல்ஹாசன் இன்று காலை தொடங்கி வைத்தார். கமல் வருகிறார் என்று தெரிந்ததும், அவரது ரசிகர்களும் அரங்குக்குள் நுழைய முண்டியடிக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அகடாமியின்  கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது.
 

’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்

''பார்த்து.... பார்த்து... பொறுமை'' என கூறியபடியே நுழைந்த கமல், ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

பின்னர் பேசியவர், ’’தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. இந்த புகைப்படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டது கிடையாது. படமே நம் வீர விளையாட்டையின் கதை சொல்லும். இந்த படத்தைப் பார்த்துதான் திறந்து வைக்கலாம்னு வந்தேன்.  தூய தமிழில் ஜல்லிக்கட்டை ’ஏறு தழுவுதல்’னு சொல்லுவாங்க. ஏறு தழுவுவதால் காளைகள் துன்புறுத்தப்படாது. இது தமிழகத்தின் சுற்றுலா வருமானத்திற்கும் பெரும்பங்கு வகிக்கிறது. விரைவில் தடையை விலக்கி, ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற வேண்டும்!" என்றார்.

விருமாண்டி படத்துக்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகியவர் சொன்னால், சரியாகத்தானே இருக்கும்!



- சிபிச் சக்ரவர்த்தி

படம்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு