Published:Updated:

இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?

இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?
இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?

இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?

ல்லிக்கட்டு நம் பாரம்பரியம் சார்ந்த மண்ணின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வீர விளையாட்டு. முல்லை நிலத்தின் ஆயர்குல மக்களால் பண்டைய காலந்தொட்டே ஏறுதழுவுதல் நடைபெற்று வருகிறது. ஏறு என்பது காளை, தழுவுதல் என்பது காளையை கட்டி தழுவி பிடிப்பது.

இடைப்பட்ட காலத்தில் 'சல்லிக்காசு' என்ற ஒருவகை நாணயம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது சல்லிக் காசை மாட்டின் கொம்பில் கட்டிவிட்டு, அந்த காளையை அடக்கி காசை எடுப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதனால் சல்லிக்கட்டு என்று பெயர் வந்தது. காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று ஆனது. இதையே வடமாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனக் கூறுவர்.

இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?

ஜல்லிக்கட்டுக்கு ஏன் எதிர்ப்பு?

இந்தியாவில் தற்போது முளைவிட்டிருக்கும் இயற்கை விவசாயத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த ஜல்லிக்கட்டு எதிர்ப்பு பன்னாட்டு முதலாளிகள் மூலம் முன்னெடுக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. விலங்குகள் நல இயக்கம் என்று கூறப்படுகின்ற பீட்டா, ப்ளூ க்ராஸ் போன்ற அமைப்புகள் மிருகவதை என்கிற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றன. ஆனால், கர்நாடகாவில் எருமை பந்தயமும், மகாராஷ்டிராவில் குதிரையில் பீரங்கி வைத்து சுடப்படுவதும், கேரளாவின் குருவாயூரில் ஆண்டுதோறும் நடைபெறும் யானை பந்தயமும் இவர்கள் கண்களுக்கு புலப்படவில்லையா?

தமிழகத்தில் குறைந்துவரும் நாட்டு மாட்டினங்களை அழிக்கவும், இயற்கை விவசாயத்தை வேரறுக்கவும் நடைபெறுகிறதா இந்த ஜல்லிக்கட்டு தடை நாடகம்? அதாவது நாட்டு மாடுகளின் காளையினங்களை இரண்டாக பிரித்து, ஒருவகையை ஏர் உழவுக்கும், மாட்டு வண்டிகளுக்கும் பயன்படுத்திக் கொள்வர். மற்றொரு வகை காளைகளை காயடிக்காமல் விட்டுவிடுவர். அவற்றை நாட்டு மாடுகளின் இனவிருத்திக்கும், ஜல்லிக்கட்டுக்கும் பயன்படுத்திக்கொள்வர். இந்த நாட்டு மாடுகளின் சாணம்தான் இயற்கை விவசாயத்திற்கு உகந்தது. கலப்பின பசுவின் சாணத்தில் இருக்கும் உரங்களின் சத்துக்களை காட்டிலும் நாட்டு மாடுகளின் சாணத்தில் வரும் உரத்தின் சத்துக்கள் அதிகம். இதனால் இயற்கை விவசாயத்தில் அதிக பங்களிப்பை ஏற்படுத்தி, அதிக விளைச்சலை கொடுத்து வருகிறது. இதனால் கூட பன்னாட்டு முதலாளிகள் எதிர்க்கின்றனர் என்று தோன்றுகிறது. இதோடு மட்டுமில்லாமல் 2016-ல் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும் என்று அமெரிக்க நிறுவனமொன்று கூறுகிறது. ஜல்லிக்கட்டை தடை செய்வதன் மூலம் மாட்டிறைச்சி வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்று நினைத்திருப்பார்கள் என்ற எண்ணமும் தோன்றுகிறது.

இயற்கை விவசாயத்தை அழிக்கவா ஜல்லிக்கட்டு தடை?ஜல்லிக்கட்டு நடத்துவதை மிருகவதை என்று கூறும் விலங்குகள் நல அமைப்புகளே, நீங்கள் தமிழகத்திலுள்ள எங்கள் கிராமங்களுக்கு வந்து, எங்களோடு ஒருநாள் தங்கி, காளைகளுடன் பழகி பாருங்கள். அப்போது தெரியும் மாடுகளுக்கும் எங்களுக்குமான நேசம். ஜல்லிக்கட்டு காளைகளை எங்கள் வீட்டில் ஒருவராக எங்களின் தோழனாக கருதி வளர்க்கிறோம். சிறு குழந்தைகள் கூட பயமறியாமல் காளைகளுடன் விளையாடும் காட்சிகளை நீங்கள் காணலாம்.

கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் இளைஞர்களை போல காளைகளும் சுதந்திரமாக சுற்றித்தியும். அவைகளை பராமரிக்கும் விதங்களை பாருங்கள். தினமும் சத்தான உணவுகளையும், தானியங்களையும், வயல்வெளி புற்களையும் மேய்ந்து துள்ளித்திரியும் காளைகளை பாருங்கள்.

எங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப புகைப்படத்தை அலங்கரிக்கும், வீட்டின் செல்லப் பிள்ளைகளாகவும் வளரும் காளைகளை பாருங்கள். விஞ்ஞானம் என்ற பெயரில் மாட்டின் பால்காம்புகளில் எந்திரத்தை மாட்டி பால் கறக்கும் தத்துவத்தை எந்த மிருகவதையில் சேர்ப்பீர்கள்?

மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் மாடுகளுக்கு விழா எடுக்கும் ஒரே இடம் தமிழகம்தான். காளைகளின் வீரத்தை பறைசாற்றவே நடத்தப்படுகிறது ஜல்லிக்கட்டு விழா. வருடம் முழுவதும் உழைத்து களைத்த மாடுகள் அன்று ஒருநாள் புத்துணர்வுடன் சுற்றிவரும். பீட்டா, ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளே, நகரத்து விலங்குகளை மட்டுமே கண்ணில் பார்த்த உங்களுக்கு கிராமத்தின் வாசனை தெரியுமா? மாட்டுடன் மாடாய் உழைக்கும் மனிதனின் மண்வாசனை தெரியுமா?

த.எழிலரசன்

படம்:வி.சதீஷ்
(மாணவ பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு