Published:Updated:

நிலக்கரி ஊழல்: ஹசாரேவிற்கு பிரதமர் மறுப்பு கடிதம்!

விகடன் விமர்சனக்குழு
நிலக்கரி ஊழல்: ஹசாரேவிற்கு பிரதமர் மறுப்பு கடிதம்!
நிலக்கரி ஊழல்: ஹசாரேவிற்கு பிரதமர் மறுப்பு கடிதம்!
நிலக்கரி ஊழல்: ஹசாரேவிற்கு பிரதமர் மறுப்பு கடிதம்!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறும்  குற்றச்சாட்டுக்கள் அடைப்படை ஆதாரமற்றது என்று அன்னா ஹசாரேவிற்கு பிரதமர்  மன்மோகன்சிங் மறுப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தரப்பில் ஹசாரேவுக்கு அனுப்பப்பட்டுள்ள  கடிதத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஹசாரே ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐ குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் ஹசா‌ரே வெளியிட்டுள்ள கருத்து  முற்றிலும் தவறானது என்றும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க  வேண்டும் என்ற ஹசாரே குழுவின் கோரிக்கை ஏற்பதற்கில்லை என்று அதனையும்  பிரதமர் நிராகரித்துள்ளார்.

கருப்பு பணம் பற்றிய பிரச்னையை குறிப்பிட்டுள்ள பிரதமர்,வெளிநாடுகளில் பதுக்கி  வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.