Published:Updated:

உண்ணாவிரத போராட்டத்தில் ஹசாரேவும் பங்கேற்பு!

Vikatan Correspondent
உண்ணாவிரத போராட்டத்தில் ஹசாரேவும் பங்கேற்பு!
உண்ணாவிரத போராட்டத்தில் ஹசாரேவும் பங்கேற்பு!
உண்ணாவிரத போராட்டத்தில் ஹசாரேவும் பங்கேற்பு!

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மத்திய அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த  சிறப்பு குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை  டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமும் பங்கேற்க உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவுக் காரணமாக, ஹசாரேவின் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று முன்னதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வருகிற 29  ம் தேதி வரை அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, பின்னர் தாமும் உண்ணாவிரத போராட்டத்தில் தாமும் பங்கேற்கப்போவதாக ஹசாரே  இன்று அறிவித்தார்.இதற்காக அவர் டெல்லி வந்துள்ளார்.

மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து  விசாரிக்க வேண்டும்;எம்.பி.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க விரைவு  நீதிமன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹசாரே குழு  இப்போராட்டத்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.