Published:Updated:

உண்ணாவிரதம் முடிவு; அரசியலுக்கு வருவதாக ஹசாரே அறிவிப்பு!

உண்ணாவிரதம் முடிவு; அரசியலுக்கு வருவதாக  ஹசாரே அறிவிப்பு!
உண்ணாவிரதம் முடிவு; அரசியலுக்கு வருவதாக ஹசாரே அறிவிப்பு!
உண்ணாவிரதம் முடிவு; அரசியலுக்கு வருவதாக  ஹசாரே அறிவிப்பு!

புதுடெல்லி:  வெள்ளிக்கிழமை  மாலை 5 மணியுடன் தனது உண்ணாவிரத  போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரே, அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை. மக்கள் விரும்புகிறார்கள். நான் நேரடியாக அரசியலில் ஈடுபட மாட்டேன்.

இளைஞர்கள்தான் அரசியலுக்கு முதுகெலும்பு. அரசியலில் ஒரு நல்ல வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்துவோம் என்று ஹசாரே அறிவித்துள்ளார்.வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா முழுக்க பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட உள்ளோம் என்றும்  ஹசாரே கூறியுள்ளார்.

முன்னதாக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி,டெல்லி ஜந்தர் மைதானத்தில் உண்ணாவிரதம்  இருந்து வந்த ஹசாரே மற்றும்  அவரது குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்   உள்ளிட்டவர்களின் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்தது.

இதனால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பொதுமக்களும்,முக்கிய பிரபலங்களும் ஹசாரேவுக்கும்,அவரது குழுவினருக்கும்   கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் டெல்லி காவல்துறையினரும் கடிதம் மூலம் இக்கோரிக்கையை   வலியுறுத்தினர்.

அத்துடன் மத்திய அரசு இவ்விஷயத்தில் மவுனம் சாதிப்பது குறித்து கண்டனம்   தெரிவித்த பா.ஜனதா முன்னாள் தலைவர் கோவிந்தச்சார்யா, ஹசாரே மற்றும்   கேஜ்ரிவால் ஆகியோரது உடல்நிலை குறித்து தாம் மிகவும்   கவலையடைவதாகவும்,எனவே உண்ணாவிரதத்தை கைசிட வேண்டும் என்றும்    கூறியிருந்தார்.

இந்நிலையில் தாங்கள் உண்ணாவிரதத்தை தொடருவதா வேண்டாமா என்பது குறித்து   மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான   இந்தியா’ அமைப்பு இன்று தனது ட்விட்டர் தளத்தில் கேட்டுக்கொண்டது.

1) தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

2) இந்த நாட்டிற்கு ஒரு மாற்று அரசியலை அன்னாஜி( ஹசாரே) கொடுக்க   வேண்டுமா? என இரண்டு கேள்விகளை கேட்டு,அதற்கு ஆம் அல்லது இல்லை என   பதில் தெரிவிக்குமாறு அந்த அமைப்பு கேட்டிருந்தது.

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை நாளை  மாலை 5 மணியுடன்  முடித்துக்கொள்வதாக ஹசாரே குழு அறிவித்துள்ளது.

உண்ணாவிரதத்திற்கு கடந்த முறை போன்று போதிய மக்கள் ஆதரவு இல்லாமல்போனது,  மத்திய அரசு இதனை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றும் ஹ்சாரே,  அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது உடல் நிலை மோசமடைந்தது ஆகிய  காரணங்கள் மட்டுமல்லது, அரசியலில் ஈடுபடலாம் என்று  ஹசாரே  குழுவினரின் தூண்டுதலும்தான் உண்ணாவிரத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிகிறது.