‘சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கொடுத்தால், வீட்டுமனை தருகிறோம்; வீட்டில் ஒருவருக்கு வேலை தருகிறோம்’ - 2007-ம் ஆண்டில் இப்படி வாக்குறுதி கொடுத்துதான் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 3,000 ஏக்கர் அளவில் நிலங்கள் வாங்கப்பட்டன. ஆனால், 12 ஆண்டுகளைக் கடந்தும் அந்த நிலங்களில் எந்தவிதமான பணிகளும் தொடங்கப்பட வில்லை. இதனால், நிலத்தை மீட்கும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் நிலத்தைக் கொடுத்தவர்கள்.

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங் களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜி.வி.கே குழுமம் ஆகியவை இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்காக, நூற்றுக்கணக்கான விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. அவற்றை திரும்பக் கேட்டுத்தான் போராட்டம்!

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரையிடம் பேசினோம்.

‘‘சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கொடுத்தால், ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம், வீட்டுமனை, வீட்டில் ஒருவருக்கு வேலை என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்து, திருமாந்துறை, எறையூர், லப்பை குடிகாடு, பேரையூர் உள்ளிட்ட 15 கிராமங்களிலிருந்து 3,000 ஏக்கர் அளவில் விளைநிலங்களை கையகப் படுத்தியுள்ளனர். வாக்குறுதிகள் அனைத்தையும் ஒப்பந்தப் பத்திரத்தில் எழுதிப் பதிந்தும் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா முன்னின்று விவசாயிகளிடம் பேசி நிலங்களை வாங்கிக் கொடுத்ததால், மக்கள் நம்பிக்கை யுடன் நிலங்களை கிரயம் செய்துக் கொடுத்தனர். வேலை கிடைக்கும், வாழ்வாதாரம் உயரும் என்று நம்பிக்கையுடன் இருந்த மக்கள், இன்று நிலத்தை யும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து கடனாளியாக நடுத்தெரு வில் நிற்கிறார்கள். இளைஞர்கள் பலர், அண்டை மாநிலங்களுக்குச் சென்று கூலி வேலைசெய்து பிழைக்கிறார்கள்.

சமரசம் செய்து பிரச்னை யைத் தீர்த்துவைக்க வேண்டிய அரசு, மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால்தான் அரசை நம்பி புண்ணிய மில்லை என `எங்கள் நிலங்களை நாங்களே மீட்டுக்கொள்கிறோம்’ என்று போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்’’ என்றார்.

நிலங்களை இழந்தவர்களில் ஒருவரான பூவாயி, ‘‘நிலத்தை எழுதிக் கொடுத்தா, கிடைக்கிற பணத்துல பொண்ணுக்குக் கல்யாணம் முடிச்சிடலாம்; அவங்க கொடுக்கிற வீட்டுமனையில வீட்டைக் கட்டிக்கலாம்; வேலை கிடைச்சா பிழைப்பை நடத்திக்கலாம்னு நம்பி எழுதிக் கொடுத்தோம். நான் மூணு ஏக்கர் நிலத்தைக் கொடுத்திருக்கேன். கிடைச்ச பணத்துல பொண்ணோட கல்யாணம் முடிஞ்சிருச்சு. மீதிப்பணத்தை, என் வீட்டுக்காரர் குடிச்சே அழிச்சுட்டார். வீடும் இல்லை, வேலையும் கிடைக்கலை. நெல்லும் சிறுதானியமும் விளைஞ்ச நிலத்துல இப்போ புதர் மண்டிக் கிடக்கு. ஃபேக்டரி வரணும், இல்லாட்டி நிலத்தை எங்களுக்கே கொடுத்துடணும்’’ என்றார் வேதனையுடன்.

இதுகுறித்துப் பேசிய, சூழலியல் செயற்பாட்டாளர் சரவணன், ‘‘தேர்தல் சமயத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை நிறைவேற்றுவதாகச் சொல்லி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பிறகு அதுகுறித்து வாயே திறப்பதில்லை. 2013-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ‘திருமாந்துறைப் பகுதியில் விமானத்துக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை தொடங்கப்படும்’ என்று சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்தார். ஆனால், இன்றுவரை ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை.

2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 101 ஷரத்தில், ‘எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அது ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படவில்லையென்றால், எந்தவித இழப்பீடும் இன்றி நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இடத்தை நாங்கள் எடுத்து விவசாயம் செய்யப்போகிறோம்’’ என்றார்.

ஜி.வி.கே குழும அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘மாவட்ட நிர்வாகம் சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. நாங்கள் செயல்படுத்தும் நோக்கில்தான் இருக்கிறோம்’’ என்றனர்.

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், ‘‘மக்கள் நடத்திய போராட் டத்தில் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்தத் திட்டம் ஜி.வி.கே குழுமத்தின் கையில் உள்ளதா அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றும் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் ஜி.வி.கே குழும அதிபரைச் சந்தித்து, `திட்டத்தைத் தொடங்குங்கள் அல்லது நிலங்களை விவசாயிகளிடம் கொடுங்கள்’ என்று சொல்ல இருக்கிறேன்’’ என்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் பேசினோம். ‘‘மாவட்டத்தின் தரப்பில் ஒத்துழைப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இப்போது பிரச்னை எழுந்துள்ள தால், ஜி.வி.கே குழுமம் மற்றும் விவசாயிகள் இரு தரப்பிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம். திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்’’ என்றார்.

சீக்கிரம்!