Published:Updated:

ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஈரான் நீதிமன்றம்

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம்

ஹிஜாப் சட்டத்தை மீறிய பெண்கள் அபராதம் கட்ட வேண்டும், அவர்கள் தொழில், வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஈரான் நீதிமன்றம்

ஹிஜாப் சட்டத்தை மீறிய பெண்கள் அபராதம் கட்ட வேண்டும், அவர்கள் தொழில், வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Published:Updated:
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம்

கடந்த மூன்று மாதங்களாக ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் ஈரானிய பெண்களால் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு தற்போது ஹிஜாப் சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, நியூஸ் ஏஜென்சி ஒன்று நேற்று (10ம் தேதி) தெரிவித்துள்ளது.

 மஹ்சா அமினி
மஹ்சா அமினி

கடந்த 1983- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ஈரானிய பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. கட்டாயமாக்கப்பட்ட பின்னர் பெண்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி பின்பற்றி வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மாஷா அமினி என்ற பெண், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், மூன்று நாள்களுக்கு பின் உயிரிழந்தார். மாஷா அமினியின் இறப்புக்குப் பின்னர் ஈரான் நாடு முழுவதும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

Free hijab என்ற முழக்கத்துடன் பெண்கள் ஹிஜாப்பை தூக்கி எறிந்தும், முடியை வெட்டியும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் போலீசாரின் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. தற்போது இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஹிஜாப் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப்புக்கு எதிரான  போராட்டம்
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம்

பெண்கள் காரில் கூட ஹிஜாப்பை விலக்கக் கூடாது, ஹோட்டலிலும் இதே கட்டுப்பாடு தான். ஹிஜாப் சட்டத்தை மீறிய பெண்கள் அபராதம் கட்ட வேண்டும், அவர்கள் தொழில், வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.