Published:Updated:

தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்ட சலூன் கடைகள்! - திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி கேட்டுப் போராட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதுசெய்யப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கிராமத்தில் 12 வயது சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடூரமான முறையில் வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். விசாரணையில் இறங்கிய வடமதுரை போலீஸார், அந்தச் சிறுமியின் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்துவந்த 17 வயது சிறுவனைக் கைதுசெய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்
கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்

மேலும், இதை வெளியே சொல்லாமலிருக்க, மூவரும் சேர்ந்து, சிறுமியை கொலை செய்யத் திட்டமிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியின் மூக்கு மற்றும் வாயில் மின் வயரைவைத்து, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதை வாக்குமூலமாக கொடுத்தான் அந்தச் சிறுவன்.

தமிழகத்தை உலுக்கிய திண்டுக்கல் - ஆத்தூர் சிறுமிகளின் கொலை வழக்கு... தற்போதைய நிலை என்ன?

இந்தநிலையில், வழக்கின் போக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மட்டுமே குற்றவாளி என போலீஸாரால் கூறப்பட்டு, அவர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வழக்கின் விசாரணை முடிவடைந்து, நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர்

அதில், குற்றம்சாட்டப்பட்டவர்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்: அன்று 14… இன்று 10..! - தொடர்ந்து கைப்பற்றப்படும் நாட்டுத் துப்பாக்கிகள்!

இதற்கிடையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் இணைந்து, சிறுமி வழக்கில் நீதிகோரி தமிழகம் முழுவதும் இரு சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். `இந்த வழக்கில் அரசே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதிலுமுள்ள சலூன் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், மாவட்ட தலைநகரங்களில், நீதி கேட்கும் போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.

திண்டுக்கல் கலெக்டரைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி
திண்டுக்கல் கலெக்டரைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி
திண்டுக்கல்: பட்டாகத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டம்!- போலீஸ் ரேடாரில் 6 பேர்

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர், திண்டுக்கல் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். கரூர் எம்.பி ஜோதிமணி, `சிறுமியின் மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு