Published:Updated:

`இந்தியாவின் கிரேட்டா என அழைக்காதீர்கள்..!’- காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் 8 வயதுச் சிறுமி

லிசிபிரியா கங்குஜம்
News
லிசிபிரியா கங்குஜம்

நீங்கள் என்னை இந்தியாவின் கிரேட்டா என அழைப்பது என்னுடைய கதையை அழிப்பதற்குச் சமம் என லிசிபிரியா கங்குஜம் கூறியுள்ளார்.

லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam). மணிப்பூரைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமியான இவர் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். `பருவநிலை மாற்றத்திலிருந்து வருங்காலத்தைக் காக்க ஒரு சட்டம் இயற்றுங்கள்' என்ற கோரிக்கையுடன் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு முன்பாக அமர்ந்தார். `பிரதமருக்கு ஒரு சிறுமியின் கோரிக்கை' என்ற தலைப்பில் செய்திகளும் வெளியாகின. ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க், லிசிபிரியா கங்குஜம் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால் இவர்களின் பயணம் வேறுபட்டது.

லிசிபிரியா கங்குஜம்
லிசிபிரியா கங்குஜம்

லிசிபிரியாவின் ட்விட்டர் பதிவுகள் இதை விவரிக்கின்றன. அவர் பதிவிட்ட ட்வீட்டில், ``என்னை இந்தியாவின் கிரேட்டா என அழைப்பதை நிறுத்துங்கள். எனக்கும் அவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் பொதுவான குறிக்கோள் உள்ளது. ஆனால், எனக்கென்று சொந்த அடையாளமும் கதையும் இருக்கிறது. கிரேட்டாவுக்கு முன்பாகவே ஜூலை 2018-ல் நான் என்னுடைய பயணத்தைத் தொடங்கிவிட்டேன்.

ஜூலை 4, 2018-ம் ஆண்டு மங்கோலியாவில் நடந்த ஐ.நா நிகழ்வில் உலகத் தலைவர்களின் முன்னிலையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான என்னுடைய குரலை முதன்முதலாக உயர்த்தினேன். அங்கிருந்து என்னுடைய பயணத்தைத் தொடங்கிவிட்டேன். குழந்தைகள் இயக்கமாக (child movement) இதை ஆரம்பித்தோம். இதன்மூலம் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜூலை 21, 2019-ல் நாடாளுமன்றத்துக்கு முன்பாக அமர்ந்து ஒருவார காலம் தொடர்ந்து என்னுடைய போராட்டத்தை முன்னெடுத்தபோதுதான் ஊடக வெளிச்சம் என் மீது விழுந்தது.
லிசிபிரியா கங்குஜம்

இந்த அமைப்பைவிட என்னுடைய பணி மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்தேன். எனக்கு பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை. குறைவான ஊடக வெளிச்சம் மட்டும் கிடைத்தது. பிப்ரவரி 2, 2019-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஜூலை 21, 2019-ல் நாடாளுமன்றத்துக்கு முன்பாக அமர்ந்து ஒருவார காலம் தொடர்ந்து என்னுடைய போராட்டத்தை முன்னெடுத்தபோதுதான் ஊடக வெளிச்சம் என் மீது விழுந்தது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நான் பள்ளிக்குச் செல்லவில்லை. எனக்கு அப்போது 7 வயதுதான். நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக ஒவ்வொரு வாரமும் என்னுடைய போராட்டத்தை முன்னெடுத்து வந்தேன். இந்தச் சிறுவயதில் என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளேன். நீங்கள் என்னை இந்தியாவின் கிரேட்டா என அழைக்கக் கூடாது. நீங்கள் என்னை அப்படி அழைப்பது என்னுடைய கதையை அழிப்பதற்குச் சமமாகும்” எனக் கூறியுள்ளார்.

லிசிபிரியா கங்குஜம்
லிசிபிரியா கங்குஜம்

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி கிரேட்டா தன்பெர்க் காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலுக்கு எதிரான தன் போராட்டத்தை 2018, ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ந்து வருகிறார்.

தனி ஆளாகத் தொடங்கிய கிரேட்டாவின் போராட்டம் தற்போது பல மில்லியன் மாணவர்களை இணைத்துள்ளது. ஒற்றைச் சிறுமியின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. கிரேட்டாவின் இந்தப் பயணத்தையும் அவரது முயற்சியையும் லிசிபிரியா கங்குஜம் மறுக்கவில்லை. `கிரேட்டா எங்களுள் ஒருவர், அவர் எங்களின் உத்வேகம்' என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஐ.நா சார்பில் நடந்த காலநிலை மாற்றம் மாநாட்டில் லிசிபிரியா கங்குஜம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் உடன் அவர் கலந்துரையாடினார். இதையடுத்து ஸ்பானிஷ் ஊடகங்கள் `தெற்கிலிருந்து ஒரு கிரேட்டா’ என்ற தலைப்பில் லிசிபிரியா குறித்து செய்தியை வெளியிட்டிருந்தன.