Published:Updated:

மதுரை: `சித்திரைத் திருவிழாவில் மக்கள் கலந்துகொள்ள அனுமதி வேண்டும்!’ - போராட்டத்தில் குதித்த மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பங்குபெறாமல் சித்திரைத் திருவிழா நடந்து முடிந்தது. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`சித்திரைத் திருவிழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும். அதில் கலந்துகொள்ள மக்களை அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள் திடீரென்று போராட்டத்தில் இறங்கியதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள்
கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள்

தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் முதன்மையானது, சிறப்பானது மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா.

மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும் சித்திரைத் திருவிழா, திருக்கல்யாணத்தில் முடிந்து, அழகர்மலை கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு வருகை தந்து, திரும்பி செல்லும் நாள்கள் வரை அனைத்து நாள்களும் மதுரையில் கொண்டாட்டமாக இருக்கும்.

மதுரை மக்கள் சாதி, மதம் பார்க்காமல் உற்சாகமாகக் கொண்டாடும் ஒரு விழா சித்திரைத் திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென்மாவட்ட மக்களும் இந்தத் திருவிழாவைக் காண மதுரைக்கு வருவார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இந்தநிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பங்குபெறாமல் சித்திரைத் திருவிழா நடந்து முடிந்தது. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு மக்கள் பங்களிப்புடன் திருவிழா நடக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் மக்கள் மீண்டும் வேதனை அடைந்திருக்கிறார்கள்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

சித்திரைத் திருவிழாவை மக்கள் கலந்துகொள்ளும் வகையில் நடத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்துவரும் நிலையில், இன்று காலை தமுக்கம் அருகே கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்தப் பகுதியே பதற்றமானது. உடனே காவல்துறையினர் வந்து போராட்டக்காரர்களைக் கைதுசெய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

குண்டுக்கட்டாக ஒவ்வொருவரையும் கைதுசெய்ததால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள்.
கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள்.

இதற்கிடையே கொரோனா தடுப்பு கண்காணிப்புக் கூட்டம், கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சந்திரமோகன்.ஐ.ஏ.எஸ் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அலுவலகர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு