Published:Updated:

கறுப்பு நிற உடையில் நாடகம்! - திருநர்கள் வெளிப்படுத்திய சி.ஏ.ஏ எதிர்ப்புக் குரல்

எப்போதும் பல வண்ண உடைகளில் நிரம்பியிருக்கும் நாடக மேடை இந்த முறை கறுப்பு நிறத்தால் நிரம்பியிருந்தது.

நாடகம்
நாடகம் ( மழவில் த்வனி குழு )

வானவில்லின் ஏழு நிறங்கள்தான் மாற்றுப்பாலினத்தோருக்கான கொடியின் அடையாளம். அந்தக் கொடியின் ஒவ்வொரு நிறமும் வாழ்க்கை, ஆற்றுப்படுத்துதல், சூரிய ஒளி, இயற்கை, கலை, அமைதி, ஆன்மா என ஒவ்வோர் உணர்வையும் குறிப்பதாகும். அதுபோல 'பறையான் மறந்த கதைகள்' (சொல்ல மறந்த கதைகள்) என்கிற தலைப்பில் தங்கள் உணர்வுகளை நிறங்களால் வெளிப்படுத்தும் நாடகத்தை கேரளா முழுவதும் 'மழவில் த்வனி' என்கிற கலைக்குழு நடத்தி வருகிறது.

நாடகம்
நாடகம்
மழவில் த்வனி குழு

இதுவரை பல மேடைகளில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த நாடகத்தின் 25 வது நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று கொச்சியில் நடந்தது. ஆனால், எப்போதும் பல வண்ண உடைகளில் நிரம்பியிருக்கும் நாடக மேடையும் நடிகர்களின் உடைகளும் இந்த முறை கறுப்பு நிறத்தால் நிரம்பியிருந்தது.

நாடகத்தில் நடித்த 15 பேரும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு நிற உடை அணிந்து நடித்தனர். இதுகுறித்து நாடகத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள எழுத்தாளர் ரேவதி கூறுகையில், ``மழவில் த்வனி கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார்கள். நாடகத்தில் எனது வெள்ளை மொழி நாடகமும் ஒரு பகுதியாக வருகிறது.

நாடகம்
நாடகம்
மழவில் த்வனி குழு

நானும் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களுடன் இணைந்து நடித்து வருகிறேன். எப்போதும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப உடையணிந்து நாடகத்தில் நடிப்போம். ஆனால், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருநர் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கறுப்பு உடையணிந்து நடித்தோம்.

இந்தியாவைக் கூறுபோடும் குடியுரிமை திருத்தச் சட்டம்!

தனிமனித மற்றும் சமூக உரிமைகளைப் பறிக்கும் எதையும் திருநர்கள் எதிர்ப்போம்" என்று கூறினார். வரும் ஜனவரி மாதத்தில் கோழிக்கோட்டில் நடக்கவிருக்கும் நாடகத்திலும் கறுப்பு நிற உடையணிந்தே நடிக்கவிருக்கிறது இந்தக் குழு.