Published:Updated:

தற்கொலை செய்துகொள்வதற்குமுன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்! #MyVikatan

suicide
News
suicide

உங்கள் அப்பா மது பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகி இருப்பார். தலை தலையாக அடித்துக் கொள்வார். நீங்கள் மறு உருவம் எடுத்து காக்கையாக வந்ததாக நினைத்து காகத்திடம் பேசி அழுவார்.

தற்கொலை செய்துகொள்வது சட்டப்படி தவறு என்பது அந்நியன் படம் பார்த்தபிறகு தான் எனக்கு தெரிய வந்தது. ஆனால் இந்த தகவல் இன்றைய மாணவ மாணவிகளுக்கு தெரியவில்லை போல. தேர்வில் தோல்வி, பாலியல் வன்கொடுமை காரணமாக நிறைய பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் தற்கொலை செய்துகொண்ட பின் அவர்களது குடும்பத்தினர் என்ன மாதிரியான அவமானங்களை சந்திப்பார்கள், மனதளவில் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை பார்ப்போம்.

1. நீங்கள் தற்கொலை செய்து கொண்டால் அதை எல்லாருமே தற்கொலை என சொல்ல மாட்டார்கள். யாராவது சிலர் உங்களுடைய அம்மா அப்பா மீது கொலைப்பழி சுமத்துவார்கள். பையனை / பிள்ளைய பேசுபேசுன்னு பேசி சாகடிச்சிட்டு நாடகம் ஆடுறாங்க என்பார்கள். இதை குசுகுசுவென பேசிக் கொண்டாலும் பரவாயில்லை... உங்கள் குடும்பத்தினர் காதில் விழும்படி பேசுவார்கள். அதை கேட்ட உங்கள் குடும்பத்தினருக்கு நெஞ்சே வெடிப்பது போல் இருக்கும்.

2. "பெத்த பையனை/ பிள்ளைய காப்பாத்த தெரில" என்று மற்றவரிடம் புறணி பேசும்போது உங்கள் அப்பா அம்மாவை இளக்காரமாக பேசுவார்கள். திரும்ப திரும்ப நீங்கள் தற்கொலை செய்துகொண்டதை உங்கள் அம்மா அப்பாவிடம் சொல்லிக் காட்டி மனதை மீண்டும் மீண்டும் நோகடிப்பார்கள்.

3. உங்கள் அப்பா மது பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகி இருப்பார். தலை தலையாக அடித்துக் கொள்வார். நீங்கள் மறு உருவம் எடுத்து காக்கையாக வந்ததாக நினைத்து காக்காயிடம் பேசி அழுவார். இரவு நேரங்களில் தனியாக படுத்துக் கொண்டு "வுட்டு அடிச்சிட்டனே... என் தெய்வத்த வுட்டு அடிச்சிட்டனே..." என்று தனியாக புலம்பி அழுவார். தனியாக பேச ஆரம்பித்து விடுவார்.

4. உங்கள் அம்மா மன பாரம் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்வார். பெத்தத வுட்டு அடிச்சிட்டு நாம வாழ்ந்து என்ன பண்ண போறோம் என்று நினைப்பு உங்கள் அம்மா அப்பாவிற்கு அடிக்கடி வரும். சில சமயங்களில் இருவருமே சேர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள்.

5. நீங்கள் தற்கொலை செய்துகொண்ட பின் அவர்களுடைய (பெற்றோருடைய) கனவில் நீங்கள் வந்தால் அவர்களுக்கு அன்றைய தூக்கம் கிடையாது. கனவை நினைத்து நடு சாமத்தில் எழுந்து அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டும் நெஞ்சில் அடித்துக் கொண்டும் அழுவார்கள்.

6. நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் உங்கள் சகோதர சகோதரிகளின் கனவுகள் லட்சியங்கள் சிதைந்து போகும். அவர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள்.

suicide
suicide

7. டிவி நியூஸிலோ அல்லது பேப்பர் நியூஸிலோ தற்கொலை செய்திகளை பார்த்தால் உங்கள் பெற்றோருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் நியாபகம் தான் வரும். அப்போது அவர்களின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும்.

8. பையன்/பிள்ளையின் தற்கொலை செய்தியால் சில பெற்றோர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி சரியான உறக்கமின்றி தவிப்பார்கள். அவர்கள் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் வரும். தூக்க மாத்திரைகள் சாப்பிடாமல் தூங்க முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.

9. நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் உங்கள் சகோதர சகோதரிகளின் திருமணத்தில் கூட பிரச்னை வரும். தற்கொலை செய்துகொண்டவரின் வீட்டில் எப்படி வாழ்வது? என்று முடிவு எடுத்து சொந்த வீடாக இருந்தபோதிலும் அதை விட்டுவிட்டு தனியாக வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழல் வரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தற்கொலை செய்து கொள்பவர்கள் யாரும் வேண்டுமென்றே அந்த முடிவை எடுப்பதில்லை. இந்த சமூகம் கொடுக்கும் மன அழுத்தத்தாலும் இயலாமையின் காரணமாகவும் தான் அந்த முடிவை நிறைய பேர் எடுக்கிறார்கள்.

10. நீங்கள் தேர்வில் தோல்வி அல்லது பாலியல் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டால் அதை அப்படியே யாரும் நம்ப மாட்டார்கள். "Love - கீது பண்ணிருக்கும் அந்த புள்ள... அப்பன் ஆத்தா வளர்த்த லட்சணம் அப்படி" "கொளுப்பு எடுத்துப் போயி தற்கொலை பண்ணிகிட்டவங்களுக்குலாம் கருண காட்ட முடியாது... செத்தா சாவுன்னு வுட்டுட்டு போ..." என்று பேசுவார்கள். இந்த மாதிரியான பேச்சுகள் உங்கள் குடும்பத்தினர் நெஞ்சில் கத்தியை இறக்கியது போல் இருக்கும்.

மொத்தத்தில் உங்கள் பெற்றோர்கள், உங்கள் சகோதர சகோதரிகள் நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆதலால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கொஞ்சம் பொறுமையாக இருந்து யோசித்து முடிவெடுங்கள். எதற்கும் தீர்வு உண்டு. பொறுத்தார் பூமி ஆள்வார்!

தற்கொலை செய்து கொள்பவர்கள் யாரும் வேண்டுமென்றே அந்த முடிவை எடுப்பதில்லை. இந்த சமூகம் கொடுக்கும் மன அழுத்தத்தாலும் இயலாமையின் காரணமாகவும் தான் அந்த முடிவை நிறைய பேர் எடுக்கிறார்கள். இதை வெறுமனே குடும்ப பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. இது நம் சமூகம் சேர்ந்து செய்யும் மாபெரும் தவறு. ஒவ்வொருவரின் தற்கொலையிலும் நமக்கும் பொறுப்பு உண்டு.

- மா. யுவராஜ்