Published:Updated:

அரசு வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் மூன்றாவது குழந்தையைக் கொன்ற தம்பதி!

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது.
News
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது.

`இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும்' என்ற விதிமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. அரசு வேலை நிரந்தரம் இல்லாமல் போகும் என்ற பயத்தில் மூன்றாவது குழந்தையை இழக்க அந்தத் தம்பதி முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பிகானேர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் (வயது 36). அங்குள்ள ஓர் அரசு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜவர்லாலின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமுற்றார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

வேலை பறிபோகும் அச்சம்
வேலை பறிபோகும் அச்சம்

`இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற வேண்டும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும்' என்ற விதிமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. மாநில அரசின் இந்தத் திட்டத்தால் அரசு வேலை நிரந்தரம் இல்லாமல் போகும் என்ற பயத்தில் மூன்றாவது குழந்தையை இழக்க அந்தத் தம்பதி முடிவு செய்துள்ளனர்.

அரசு வேலைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அந்தத் தம்பதி, பிறந்து ஐந்து மாதங்களே ஆன அந்தப் பெண் குழந்தையை, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிகானேர் மாவட்டத்தில் உள்ள கால்வாயில் வீசிக் கொன்றுள்ளனர்.

குழந்தை மரணம்
குழந்தை மரணம்

சத்தர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் வந்ததும், விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிந்தனர். அரசு வேலைக்காகப் பெற்ற குழந்தையைக் கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பிகானேர் காவல் நிலையத்தினர் இந்தச் சம்பவம் குறித்து கூறும்போது, `அரசு வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து குழந்தையைக் கொன்ற தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக ஜவர்லால் மேக்வால் இப்படிச் செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவியையும் சேர்த்து இருவர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றார்.