Published:Updated:

ஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்?

சமூக வலைதளம்
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதளம்

மனம்

ஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்?

மனம்

Published:Updated:
சமூக வலைதளம்
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதளம்

பேஸ்புக் கணக்கில் ஆயிரம் நண்பர் களாவது வைத்திருப்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நியூஸ் ஃபீடில் ‘In a Relationship’, ‘Engaged to’, ‘Married’, ‘Blessed with a Baby’ போன்ற பதிவுகள் அடிக்கடி தட்டுப்படும். லைக் பட்டனை அழுத்தாமல் அந்தப் பதிவைக் கடக்கவே முடியாது. அப்படி நம் கட்டைவிரல் அழுத்தம் கொடுக்கும் அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், அவர்களின் சிரித்த முகம் நம் மனதில் தோன்றி மறையும். ‘பொறாமை’ என்று அதைப் பொதுமைப் படுத்திவிட முடியாது. ‘உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும், குறிப்பாக நம் வயதுக்காரர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் மட்டும் தேக்க நிலையில் இருக்கிறோமோ?’ என்பது போன்ற இனம்புரியாத அச்சமே அது.

ஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்?

அமெரிக்கப் பயணம் செல்லும் தோழியைப் பார்த்தாலும் இந்த எண்ணம் எழும். ‘அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். புதுப்புது அனுபவங்களைப் பெறுகிறார்கள். நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று ஆதங்கப்படவைக்கும். இந்த உணர்வு ‘Fear Of Missing Out’ (FOMO) என்று அழைக்கப்படுகிறது. இது சமூகத்தை மையப்படுத்தி ஏற்படுகிற ஒருவித பதற்ற உணர்வு (Social Anxiety) மட்டுமே. அதாவது, ‘நாம் பங்கேற்காத விஷயங்களில் ஏதேனும் முக்கியமான, சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்க லாம்’ என்ற கவலை. இன்றைய வைரல் உலகில் இந்த பாதிப்பு உலகின் 51 சதவிகித பதின்பருவத்தினருக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1996-ம் ஆண்டு, டாக்டர் டேன் ஹெர்மன் என்பவர் இந்த ஃபோமோவை முதன்முதலில் அடையாளப்படுத்தினார். மனிதர்கள், எப்படித் தங்களையே அறியாமல் சந்தையில் கிடைக்கும் புதிய பொருள்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்; புதுப்புது வாய்ப்புகளை எப்படித் தவறாமல் பிடித்துக்கொள்கிறார்கள் போன்றவை குறித்தும் ஆராய்ந்தார். நுகர்வோர் உளவியலில் இது ஒரு புதிய கோணம் என்பதையும், இது ஒரு சமூக-கலாசார நிகழ்வு என்பதையும் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபோமோவின் அறிகுறிகள்

  • சமூக வலைதளங்களை நிமிடத்துக்கு ஒருமுறை ‘Refresh’ செய்வது; கழிவறை போன்ற இடங்களுக்குக்கூட மொபைலைத் தூக்கிக்கொண்டு செல்வது.

  • வேலையை அப்படியே விட்டுவிட்டு தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது.

  • சந்தையில் புதிதாக ஏதேனும் பொருள் வந்தால் அது குறித்துத் தெரிந்துகொள்ளாமலே வாங்கிவிடுவது.

  • சாத்தியமற்றது என்று தெரிந்தும், எல்லாவிதமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பது.

  • எல்லோரும் செய்கிற ஒரு விஷயத்தை நாமும் செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பது.

சமூக ஊடகங்களே ஃபோமோ போன்ற பிரச்னைகளை வளர்த்தெடுக்கின்றன. இருப்பதைப் பற்றி யோசிக்கவிடாமல், ஓர் அனுபவத்தை நாம் தவறவிடுகிறோம் என்ற பயத்தைக் கிளப்பி நம்மை டிஜிட்டல் அடிமையாகவே வைத்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சமூக வலைதளம் என்ற வைரல் மேடையில் நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது? அந்த மேடையில் இப்போது யாரெல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?’ என்று மட்டுமே நாம் யோசிக்கிறோம். நிஜ உலகில் அடியெடுத்து வைக்கும்போதுதான், நிஜ மனிதர்களுடன் நேரில் பழகுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதுதான் இப்படிப்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். அதற்கு முன் `இது ஒரு பிரச்னை; இது நமக்கும் இருக்கிறது’ என்பதை உணர வேண்டும். பிரச்னை இருக்கிறது என்று ஒப்புக்கொண்டால்தானே, மனம் தீர்வைத் தேடும்?

ஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்?

இன்று நீங்கள் தேவையில்லாத நேரத்திலும் உங்கள் ஸ்மார்ட் போனை எத்தனை முறை அன்லாக் செய்தீர்கள்? யோசித்துப் பாருங்கள். ஃபோமோ குறித்து யோசிக்க ஆயிரம் காரணங்கள் கிடைக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism