Published:Updated:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... 1098, 14417 உதவி எண்கள் செயல்படுவது எப்படி?

1098, 14417 உதவி எண்கள்

சமீபகாலமாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவரும் சூழலில், இந்தக் குற்றங்கள் குறித்து புகார் செய்யும், மத்திய மாநில அரசின் உதவி எண்கள் எப்படிச் செயல்படுகின்றன!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... 1098, 14417 உதவி எண்கள் செயல்படுவது எப்படி?

சமீபகாலமாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவரும் சூழலில், இந்தக் குற்றங்கள் குறித்து புகார் செய்யும், மத்திய மாநில அரசின் உதவி எண்கள் எப்படிச் செயல்படுகின்றன!

Published:Updated:
1098, 14417 உதவி எண்கள்

எப்படிச் செயல்படுகிறது -1098?

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டுவருகிறது. இந்தச் சேவை, இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டுவருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என... குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது. 1098 உதவி எண்ணுக்கு இந்தியா முழுவதும் வருடத்துக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.

1098 சைல்ட்லைன்
1098 சைல்ட்லைன்

இந்த 1098 சைல்ட்லைன் உதவி எண்ணில், ஒரு குழந்தை நேரடியாகவோ அல்லது ஒரு குழந்தைக்கு நடக்கும் குற்றம் குறித்துத் தகவல் தெரிவிக்கும்போதோ, அந்தப் பிரச்னை குறித்த விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும். தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள சைல்ட்லைன் சேவை மையத்துக்கு அந்தப் புகார் மாற்றப்படும். அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள் அந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று பிரச்னைக்கு விரைந்து தீர்வுகாண்பார்கள். இதில் குழந்தையின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை பெற்றோர்களை இழந்திருக்கிறார் என்றால், அந்தக் குழந்தைக்குப் படிப்பு, உணவு, தங்கும் இடம் ஏற்படுத்தித் தருவது, மனநல ஆலோசனை வழங்குவது முதல் அந்த குழந்தைக்குப் பண உதவி தேவையென்றால், அதை அரசின் மூலம் பெற்றுத்தருவது வரை பல்வேறு சேவைகளை இந்த சைல்ட்லைன் சேவை செய்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்படிச் செயல்படுகிறது - 14417?

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 14417 என்ற உதவி எண் செயல்பட்டுவருகிறது. இந்த உதவி எண்ணின் செயல்பாடுகள் குறித்து 14417 உதவி எண் செயல் தலைவர் பால் ராபின்சனிடம் பேசினோம். ``பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான தகவல்களையும் சேவைகளையும் வழங்க, இந்த 14417 சேவை மையம் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சேவை மையத்தில், மாணவ, மாணவிகள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், 10-ம் வகுப்பு முடித்து அடுத்தது எந்த குரூப் எடுத்துப் படித்தால் எப்படி எதிர்காலம் இருக்கும் போன்ற தகவல்கள் வழங்கப்படும். மேலும், மாணவர்களுக்குப் பள்ளியில், வகுப்பில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அவர்களின் கற்றல் குறைபாடு, கவனம் சிதறுதல் போன்ற பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது இந்த உதவி எண்ணில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை தொடர்பாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

14417 உதவி மையம்
14417 உதவி மையம்

தொடர்ந்து பேசியவர், ``மாணவர் ஒருவரிடமிருந்து அழைப்பு வருகிறது என்றால், முதலில் ஒருவர் அழைப்பை ஏற்பார். மாணவருக்கு, இல்லம் தேடிக் கல்வி, தேர்வு மையம் போன்ற ஏதேனும் தகவல் தேவை என்னும் பட்சத்தில் அங்கே தகவல் வழங்கப்படும். மாணவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால், மாணவரின் விவரம் கேட்கும்போதே, அந்த அழைப்பு உடனடியாக ஆலோசனை அலுவலகருக்கு மாற்றப்படும். அந்த ஆலோசகர் மாணவரிடம் பேசி பிரச்னை மற்றும் முழுத் தகவலையும் பெறுவார். பெறப்பட்ட பிரச்னை பள்ளியில் நடந்திருந்தால், அந்தப் பிரச்னை குறித்து அந்தப் பகுதி கல்வி அலுவலகர் முதல் உயர் கல்வி அலுவலகர் வரை தெரிவிக்கப்படும். பள்ளிக்கு வெளியில் நடந்திருந்தால், கல்வி அலுவலகர் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவிக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்படும். மாணவருக்கு எந்தப் பிரச்னை என்றாலும், அவர்கள் நேரடியாகவோ அல்லது அது தொடர்பாக வேறு யாரேனும்கூட புகார் தெரிவிக்கலாம். மாணவர்களின் முழு விவரமும் பாதுகாக்கப்படும். தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக 600 முதல் 700 அழைப்புகள் வருகின்றன. மாதத்துக்கு 20,000-க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன" என்று தெரிவித்தார்.

1098 அழைப்பு மையத்தை நாம் தொடர்புகொண்டபோது முதல் இரண்டு முறை அழைப்பு ஏற்கப்பட்டு யாரும் பேசாமல் அதுவாகவே துண்டிக்கப்பட்டது. மூன்றாவது முறை அழைப்பு ஏற்கப்பட்டு நம்மோடு ஒருவர் பேசினார். 14417 அழைப்பு மையத்தைத் தொடர்புகொண்டபோது, முதல் முறையிலேயே, அழைப்பு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism