Published:Updated:

'கௌசல்யா தாய் உள்ளிட்டோரை விடுதலை செய்திருக்கக் கூடாது'' - அரசியல் தலைவர்கள் கருத்து

'கௌசல்யா தாய் உள்ளிட்டோரை விடுதலை செய்திருக்கக் கூடாது'' - அரசியல் தலைவர்கள் கருத்து
'கௌசல்யா தாய் உள்ளிட்டோரை விடுதலை செய்திருக்கக் கூடாது'' - அரசியல் தலைவர்கள் கருத்து

மிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும்.  ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 3 பேருக்கு விடுதலையும் வழங்கி திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அதேநேரம், 'கௌசல்யா தாய் உள்ளிட்டோரை விடுதலை செய்திருக்கக் கூடாது' என்ற கருத்தையும் அவர்கள்  வெளியிட்டுள்ளனர்.

   கடந்த 2016 மார்ச் மாதம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் கௌசல்யா - சங்கர் தம்பதியினர். இவர்கள் இருவரும் உடுமலைக்கு வந்தபோது பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சங்கர். அவரது மனைவி கௌசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். 

சங்கர் படுகொலை தொடர்பாக வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக, கௌசல்யாவின் பெற்றோர்களே கூலிப்படைவைத்து சங்கரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் என்கிற மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்க் கலைவாணன், பிரசன்னா, எம் மணிகண்டன் ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில்,6 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்

கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட  3பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவக்கொலை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்குகளில் இதுவே விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காகும். மேலும் இந்த ஆணவப் படுகொலைக்கு எதிராக சாதி மறுப்புத் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர். தற்போது, இவ்வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் நம்மிடம் தெரிவித்த கருத்துகள் அப்படியே இங்கே....

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், "ஆணவப் படுகொலையில் திருப்பூர் வன்கொடுமை சிறப்பு

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. தமிழகத்தில் ஆணவப் படுகொலை நடந்து வருவது வெட்கக்கேடானது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் சாதி, மத வகுப்புவாதத்துக்கு எதிராகத் தாக்குதல் நடந்து வருகின்றன.இதற்காகப் பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல  தலைவர்களும் போராடியுள்ளனர். அப்படியான போராட்டத்தின் பலனாக முன்னேறிக் கொண்டிருக்கிறச் சூழலில், இதுபோன்று சாதி என்ற பெயரில் ஆணவப் படுகொலை நடைபெறுவது மிகவும் கவலைக்குரியது

. இப்படிப்பட்ட நிலையில் இந்தத் தீரப்பு வந்திருப்பது பாராட்டத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் தண்டனை கிடைத்திருக்குமானால், நன்றாக இருந்திருக்கும். இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. இத்தகைய சிந்தனைகள் உடையவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்" என்றார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தீண்டாமையின் ஒரு பகுதிதான் இந்த ஆணவப்படுகொலை. இதற்கு எதிரான தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இப்படியான அவலம் நடந்துகொண்டுதான் உள்ளது.''எதிர் காலத்தில் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த தவற்றை உணர்த்தவும் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஆனாலும் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதனை கௌசல்யா எதிர்த்துப் பேசியுள்ளது வரவேற்புக்குரியது. மேலும் இந்தக் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச்  சட்டம் போதாது. தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது'' இன்றார். 

பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசியபோது ''இந்த வழக்கு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை'' என்றார்.

இதுகுறித்துப் பேசிய பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ''வளர்த்த பிள்ளையின் விருப்பத்துக்கு மதிப்பளித்திருந்தால், வளர்ந்த குடும்பம் சிதைந்திருக்காது. வளர்த்த மகளின் வாழ்வும் சிதைந்திருக்காது. தந்தையைக் 'குற்றவாளி' என்று சொல்லுமளவுக்கு இறுகிய மனநிலைக்கு மகளைத் தள்ளக்கூடிய சூழலும் ஏற்பட்டிருக்காது. தூக்கு தண்டனை பெற்றிருப்பதுதான் ஒரு தந்தையின் கவுரவமா? எனவே சங்கர் ஆணவப் படுகொலையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு  வரவேற்கக்கூடியதே. அதுவும்  கூலிப்படையைச் சேர்ந்த குற்றவாளிகளுக்குக் கொடுத்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது'' என்றார்