Published:Updated:

சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!

சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!
சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!

சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!

சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அஸ்வினி என்கிற பி.காம் முதலாம் ஆண்டு மாணவி, அழகேசன் என்கிற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். கத்தியால் குத்திய அழகேசனை அருகில் இருந்த மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதினேழு வயதான அஸ்வினியும் அழகேசனும் இரண்டு ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும். பெற்றோர் சம்மதமின்றி ஏற்கெனவே அஸ்வினியின் வீட்டிலேயே திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணம் நிகழ்ந்த அன்று இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் போலீஸ் விசாரணை தரப்பு கூறுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அழகேசனிடமிருந்து பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் அஸ்வினி. இருந்தும் அழகேசன் அவரிடம் தினமும் பிரச்னை செய்துவந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்க சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் அஸ்வினி. இதற்கிடையே மதுரவாயல் காவல்நிலையத்தில் அழகேசனுக்கு எதிராக புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அழகேசன் மீது எடுத்த கைது நடவடிக்கையால்தான் ஆத்திரம் தாங்காமல் அஸ்வினியை அவர் கொலை செய்ததாகத் போலீசின் முதல்கட்ட விசாரணை கூறுகிறது.

சரிகாஷா முதல் அஸ்வினி வரை! -தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகள்!

பட்டப்பகலில் பொதுவெளியில் நடந்த இந்தக் கொலை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் பெண்கள் காதல், குடும்பம் என்கிற பெயரால் இப்படியாகக் கொலை செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. இதுவரை தமிழ் நாட்டில் பெருமளவில் அதிர்ச்சியை உண்டாக்கிய பெண்களின் கொலைகள்:

சரிகா ஷா, ஜூலை 18, 1998:
எத்திராஜ் கல்லூரி மாணவியான சரிகாஷா தன்னுடைய தோழியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். மது அருந்திவிட்டு அவருடன் சச்சரவில் ஈடுபட்ட ஒன்பது பேர் அவர்மீது விழுந்ததால் சரிகாவிற்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. ஒன்பது நாள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.

வினோதினி, நவம்பர் 14, 2012:
தமிழ்நாட்டை உலுக்கிய முக்கியமான மரணங்களுள் ஒன்று வினோதினியுடையது. காதலை ஏற்க மறுத்ததால் கட்டடத் தொழிலாளி சுரேஷின் அமில வீச்சை எதிர்கொள்ள நேர்ந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு இறந்தார்.

வித்யா, ஜனவரி 30, 2013:
சென்னையைச் சேர்ந்த வித்யா திருமணத்திற்கு மறுத்ததால் விஜயபாஸ்கர் என்பவரால் அமிலம் வீசி கொலை செய்யப்பட்டார்.

ஸ்வாதி, ஜுன் 24, 2016:
சென்னையைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியரான சுவாதி, நுங்கம்பாக்கம் இரயில்வே நிலையத்தில் காலை ஆறுமணி அளவில் கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சிகளை உண்டாக்கிய கொலைகளுள் சுவாதி கொலையும் ஒன்று. சுவாதியை வெட்டிய ராம்குமார் சிறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சோனாலி, ஆகஸ்டு 30, 2016:
காதலை ஏற்க மறுத்த சிவகங்கையைச் சேர்ந்த சோனாலி என்பவர், காதலை ஏற்க மறுத்ததால் உதயகுமார் என்பவரால் கல்லூரியிலேயே மரக்கட்டையால் அடித்துத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரான்சினா, 31 ஆகஸ்டு, 2016:

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியை பிரான்சினா. காதலை ஏற்க மறுத்ததால் வழிபாடு செய்துகொண்டிருந்த சர்ச்சிலேயே கீகன் ஜோஸ் என்பவரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்துஜா, ரேகா, நவம்பர் 13, 2017:
காதலை ஏற்க மறுத்த இந்துஜா என்பவர் சக வகுப்பு மாணவன் ஆகாஷ் என்பவரால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது தாயார் ரேகாவும் தீக்காயம்பட்டு மரணமடைந்தார்.

அடுத்த கட்டுரைக்கு