Published:Updated:

120 பெண்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்த நாசா!

அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் விமானிகளில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள்.

விமானம்
விமானம்

உலக அளவில் விண்வெளி, அறிவியல்,கணிதம் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் ஈடுபாடு குறைவாகவே இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் விமானிகளில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். இதில் மாற்றம் கொண்டு வர பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. உலக அளவில் பல்வேறு கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்துவருகின்றன.

பெண்கள்
பெண்கள்
CBS NEWS

இதில் புது முயற்சியாக, பெண்களுக்கு நேரடியான விமானப் போக்குவரத்து சார்ந்த அனுபவத்தைக் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவைச் சார்ந்த 'டெல்டா ஏர்லைன்ஸ்' நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் வூட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் இருந்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் வரை பெண்களுக்கான விமானப் பயணம் ஒன்றை இந்த நிறுவனம் ஏற்பாடுசெய்தது.

`பெண்களுக்கான முதல் விண்வெளி நடை!’ - தயாராகும் நாசா

இதற்காக இந்த நிறுவனம், அமெரிக்கா உட்பட 17 நாடுகளில்  உள்ள பள்ளிகளில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த போட்டிகளை நடத்தியது. மொத்தம்  20,000 மாணவிகள் கலந்துகொண்ட அந்தப் போட்டியில், 12 வயது முதல் 18 வயதுள்ள 120 மாணவிகளைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்த விமானத்தில், பைலட் முதல் இன்ஜின் மேற்பார்வையாளர் வரை எல்லோருமே பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு.

விமானம்
விமானம்

விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளி மையத்தைப் பார்வையிட நாசாவும் இவர்களை அனுமதித்துள்ளது. நாசாவில் உள்ள விஞ்ஞானிகளுடன் உரையாடி, அடுத்தடுத்த வளர்ச்சிகள், செயற்கைக்கோள்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றியும் தெரிந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் பேசியபோது, " எல்லாமே கனவு போன்று உள்ளது. பல லட்சங்கள் செலவழித்தாலும் இதுபோன்று ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. நாசா எங்களை அனுமதித்ததன் மூலம் 120 பெண்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேறி உள்ளனர் என்றாலும், குறைந்த சதவிகித வளர்ச்சி என்பதே உண்மை.

நாசா
நாசா

விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கான சர்வதேச தினத்தை கடைப்பிடிக்கும் விதமாக டெல்டா ஏர்லைன்ஸ் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.