Published:Updated:

``பெண்களை ஒதுக்குவது சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, வேட்டை காலத்திலும் இருந்தது!" திலகவதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பெண்களை ஒதுக்குவது சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, வேட்டை காலத்திலும் இருந்தது!" திலகவதி
``பெண்களை ஒதுக்குவது சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, வேட்டை காலத்திலும் இருந்தது!" திலகவதி

``பெண்களை ஒதுக்குவது சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, வேட்டை காலத்திலும் இருந்தது!" திலகவதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாட்ஸ்அப் பயன்படுத்தியதால் மனைவியைத் தாக்கிய கணவன்.., இன்டர்நெட்டில் போட்டோவைப் பதிந்துவிடுவேன் என மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட பெண்... இதுபோன்ற செய்திகள் தினசரி செய்திகளாக இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. அறிவியல் தொழில்நுட்பத்தில், சமூக விஷயங்களில் என எந்தப் புதிய மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்கள் மீதான வன்முறையாக அது உருமாற்றம் அடையும் வேதனையில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை. ஏன் இந்த நிலை? இதுகுறித்து, எழுத்தாளரும் காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநருமான திலகவதி ஐ.பி.எஸ் மனம் திறந்து பகிர்கிறார்.

``பெண்கள் ஓரளவுக்கு முன்னேறி இருக்கும் 21-ம் நூற்றாண்டிலும், அவர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதில் உள்ள அடிப்படை சிக்கல் என்ன?''

``சமூக வாழ்க்கையில் மனித குலம் ஒரடி முன்னோக்கி வைக்கும்போதெல்லாம், அதற்கான வசதிகள் என்னென்ன உண்டோ, அதெல்லாம் பெண்ணை ஒரு நிலைக்கு கீழே தள்ளும் வகையிலே இருக்கிறதை மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். வேட்டை சமூகமாக இருந்தபோது ஆரம்பத்தில் ஆணும் பெண்ணுமாகவே வேட்டைக்குப் போனாங்க. ஆனால், நெருப்பைக் கண்டுபிடிச்சதும் அதை அணையாமல் பார்த்துக்கிறது பெண்ணின் கடமையாகி, சாப்பாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுவருபவனாக ஆண் மாறினான். பெண்கள் ஒரே இடத்தில் ஒடுக்கப்பட்டாங்க, இப்போ, சமூக வலைதளங்களால் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டிருக்கு. அதன்மூலமா பெண்ணை அச்சுறுத்தி, தன்னுடைய இச்சைக்குப் பணியவைக்க சமூக விரோதிகள் நினைக்கிறாங்க.''

``தொழில்நுட்ப வளர்ச்சியில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்ட சமூக வலைதளங்கள் வரமா சாபமா?''

``நிச்சயமா வரம்தான். அன்று, நேருவுக்கு காந்தி ஒரு தகவல் அனுப்பறார். 8 மணி நேரத்துக்கு அப்புறம்தான் அது போய்ச் சேர்ந்துச்சு. இன்னிக்கு சொல்ல நினைக்கும் விஷயத்தை நொடியில் சேர்க்கலாம். அதனால், தொழில்நுட்ப வளர்ச்சி வரம்தான். அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கு. சமூக வலைதளத்தில் பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து, தவறாகப் பயன்படுத்துவது மிகச் சுலபமான விஷயமா மாறிடிச்சு. அப்படி செய்வேன் என ஒரு பெண் மிரட்டப்பட்டால், இதை வெளியில் சொல்லவே பயப்படுவாங்க. இந்த அச்சம்தான் சமூக விரோதிக்கு ஆயுதம். பெண்கள் தைரியமாக இருக்கணும். 'செஞ்சா செஞ்சுட்டுபோ'னு சொல்லணும். அப்போ அவனால் என்ன செய்யமுடியும்? சைபர் க்ரைமில் புகார் கொடுக்கலாம். பெண்கள் தங்களின் செல்ஃபியை ஷேர் செய்வதில் தவறில்லை. ஆனால், யாருக்கு அனுப்புகிறோம் என்பதில் கவனமாக இருக்கணும். சில பெண்கள் குளிக்கும்போதும் செஃல்பி எடுத்து காதலனுக்கு அனுப்பறாங்க. சந்தர்ப்பவசத்தால் வேறொருவருடன் திருமணம் நடக்கும்போது அதுவே ஆபத்தாக முடியுது.''

``சைபர் க்ரைம் பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியறேதே இல்லை, அதுக்காக, காவல்துறை எடுக்கும் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் எவை?''
``குற்றம் நடக்காம தடுப்பதும், குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பதும்தான் அவர்களின் கடமை. பாடப்புத்தகங்கள், தன்னார்வ அமைப்புகள், பெற்றோர் போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியம். சமூக வலைதளத்தில் பெண்களின் படங்களை ஆபாசமாக பயன்படுத்துவதை சைபர் க்ரைம் மூலம் உடனடியாக தடுக்க முடியும்.  தனது படம் தவறாகப் பயன்படுத்துவதைத் தெரிந்ததும் முகநூலிலிலேயே ரிப்போர்ட் எனும் ஆப்ஷனைப் பயன்படுத்தினால், அந்த படங்கள் அழிஞ்சுடும். பிறகும் இதைத் தடுக்க முடியலன்னா, சைபர் க்ரைமில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தரலாம். அஞ்சு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.''

``பெண்கள் மீதான வன்முறை குறைவதற்கு குடும்பம், சமூகம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி...''

``குடும்பமும் சமூகமும் பெண்களை வேறுபாடு காட்டாம நடத்தணும். விளையாட்டில் ஆரம்பிச்சு, சாப்பாட்டு விஷயம் வரை வேறுபாடு காட்டறோம். இதுதான் எல்லா வீடுகளிலும் நடக்குது. இந்த நிலையை மாற்றுவதுதான் முக்கிய நடவடிக்கை.''

``உங்கள் காவல்துறை பணியில் மறக்கமுடியாத சம்பவம்...''

``நிறைய இருக்கு. அந்தப் பெண்ணுக்கு அப்போ 17 வயசு. குடும்பத்துல ஏதோ சண்டை. அவ கோவிச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்துட்டாங்க. அதை ஒருத்தன் சாதகமாகப் பயன்படுத்தி, பாலியல் தொழில் செய்பவனிடம் அவள விற்றுவிட்டுப் போயிட்டான். அங்கே அவளுக்கு போதைமருந்து கொடுத்திருக்காங்க. ஆனாலும், அவ அந்தத் தொழிலைச் செய்ய ஒத்துக்கலை. அதனால், வேற ஒருத்தியிடம்  விற்கப்பட்டாள். அங்கேயிருந்த மூன்று ஆண்களின் உதவியோடு தப்பிக்கிறாள். ஆனால், போலீஸ் சரியாக விசாரிக்காமல் அவங்களை பிடிச்சு  சிறையில் அடைச்சுட்டாங்க. அங்கே அவளை நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செஞ்சுடறாங்க, அவளை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப்போய் பரிசோதனை செய்தபோது எதுவும் நடக்கலைன்னு சொல்லிட்டாங்க. கோர்ட்டிலும் தான் ஒரு பாலியல் பெண் எனச் சொல்ல அந்தக் கும்பல் பணம் கொடுத்து ஏற்பாடு செய்துடுச்சு. கடைசியில், இந்த கேஸ் என்கிட்ட வந்துச்சு. சரியா விசாரிச்சு, ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனையும் அந்தப் பெண்ணுக்கு நீதியும் வாங்கிக்கொடுத்தேன். அரசு மூலமா நிவாரணம் பெற்றுக்கொடுத்தேன். இப்போ அந்தப் பெண் அழகுக் கலை நிபுணராக இருக்காங்க.'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு