Published:Updated:

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

பைக்கில் செல்பவர்களை டிராஃபிக் போலீஸார் துரத்திச் செல்வதும், அதனால் பாதிப்புகள் நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் திருச்சியில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் சில...

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

•   திருச்சி - வயலூர் சாலையில் சந்தோஷ்குமார், பாலசந்திரன் என்ற இரு இளைஞர்கள் பைக்கில் சென்றபோது, அவர்கள்மீது டிராஃபிக் போலீஸார் தாக்குதல் நடத்தினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•   திருச்சி காஜாபேட்டை பகுதியில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.போலீஸுக்குப் பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய அவர்கள், ஒரு பெண்மீது மோதினர். அதில், அந்தப் பெண் உயிரிழந்தார்.

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

• அம்மா மண்டபம், காவிரி பாலம் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த மாணவர்கள் இருவரை, போலீஸார் துரத்திச் சென்றனர். தடுப்புச்சுவரில் பைக் மோதி, மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இப்போது, போலீஸாரின் இதேபோன்ற ஒரு அணுகுமுறையால் கர்ப்பிணி உஷா உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், போலீஸாருக்கு எதிரான கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் வங்கியில் பணியாற்றிவரும் இவர், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவியுடன் சென்றபோது, அந்தத் துயரம் நிகழ்ந்தது.

பெரும் துயரத்தில் இருந்த ராஜா, நடந்த சம்பவங்களைக் கண்ணீருடன் விவரித்தார். “எங்க நண்பருக்குத் திருச்சியில நிச்சயதார்த்தம். பரிசு கொடுக்க ஒரு சின்ன கிரைண்டரை வாங்கிட்டு, நானும் உஷாவும் பைக்ல போனோம். துவாக்குடி டோல் பிளாசா பக்கத்துல போலீஸ்காரங்க எங்களை மறிச்சாங்க. நான், பைக்கை ஓரமாக நிறுத்தப்போனேன். அதுக்குள்ளே ஒரு போலீஸ்காரர், என் சட்டையையும் கிரைண்டரையும் பிடிச்சு இழுத்தார். ‘ஏன் சார், நாங்க என்ன குற்றவாளிகளா? இப்படி இழுக்குறீங்க?’னு கேட்டேன். கால் மணி நேரம் அங்கேயே நின்னோம். அவங்க எதுவும் சொல்லலை. அதனால, அங்கிருந்து கிளம்பி அஞ்சு கிலோ மீட்டர் வந்திருப்போம். அப்போ, பின்னால போலீஸ் துரத்திக்கிட்டு வர்றதா என் மனைவி சொன்னா. இன்ஸ்பெக்டர் காமராஜ் வேகமாக வந்து என் மனைவியின் காலில் எட்டி உதைச்சார். கீழே விழுந்ததுல, ரெண்டு பேருக்கும் பலத்த அடி. அவ தலையிலருந்து ரத்தம் கொட்டுச்சு. அக்கம் பக்கத்தில் இருந்தவங்க, ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவெச்சாங்க. துவாக்குடி ஆஸ்பத்திரிக்குப் போன கொஞ்ச நேரத்துல உஷா இறந்துட்டா. சந்தோஷமா பேசிக்கிட்டு வந்த என் உஷாவைக் கொஞ்ச நேரத்தில இப்படி பறிச்சிட்டாங்க பாவிங்க...” எனக் கதறினார்.

“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...!”

உஷாவின் தாய் லூர்துமேரி, “கல்யாணமாகி பல வருஷங்களா உஷாவுக்குக் குழந்தை இல்லை. வேண்டாத சாமியில்லை. போகாத கோயில் இல்லை. இப்போ, உஷா மூணு மாத கர்ப்பமா இருந்தா. இந்த நேரத்துல இப்படிக் கொலை பண்ணிட்டாங்களே” என்று கதறினார்.

‘இனி இப்படித் துரத்த வேண்டாம்’ எனப் போலீஸாருக்குத் தமிழக அரசு உத்தரவு போடுவதற்கு உஷா தன் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது!

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்