Published:Updated:

`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்!'- #MeToo குறித்து விசு கருத்து

தமிழ்ப்பிரபா
`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்!'- #MeToo குறித்து விசு கருத்து
`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்!'- #MeToo குறித்து விசு கருத்து

இணையத்தில் எந்தவொரு விஷயமும் ஓரிரு நாள்களுக்கு மேல் ட்ரெண்டிங்கில் இருக்காது. ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்து இருக்கிறது MeToo. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக MeToo குறித்தான புகார்களும் அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகையச் சூழலில் இது தொடர்பாக இயக்குநரும் நடிகருமான விசு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவரிடம் பேசினேன். 

`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்!'- #MeToo குறித்து விசு கருத்து

``நான் சினிமாவில் இருந்த எண்பது, தொண்ணூறு காலகட்டங்களில் யாருடைய அயோக்கியத்தனத்துக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இவர்தான் என யாரும் கை நீட்டி குற்றம் சுமத்தியதில்லை. தவறுகள் ஆங்காங்கே நடப்பதாக அப்போதும் ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் புரளிகளாக வரத்தான் செய்தன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றும்.. எது எப்படியோ பலாத்காரம் அவ்வளவாகக் காதுகளை வந்தடைந்தது கிடையாது. 

இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மீடூ விஷயத்தில் குற்றம் சுமத்துபவருக்கும் குற்றத்தைச் சுமப்பவருக்கும் சம பங்கு கடமை இருக்கிறது. குற்றத்தை உண்மை அல்லது பொய் என நிரூபிக்க கலியுகத்தில் அநீதிகள் தாயக்கட்டை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டன. பொறுப்போம். உண்மைகள் புதையுண்டதாகச் சரித்திரம் கிடையாது. பீறிட்டு வெளிவரும். காத்திருப்போம்" என்றார்.