Published:Updated:

#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா?

``பெண்கள் ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவர்கள் ஊடகங்களின் வழியாகப் பகிரப்படும் தகவல்களையே புகார்களாகக் கருதி பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கலாம். ஏன் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள்?”

#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா?
#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா?

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பான #MeToo அண்மையில் சமூக வலைதளங்களில் மீண்டும் மிக வீரியமாகப் பேசப்பட்டது. பல்வேறு முக்கிய நபர்கள் குறித்து அவர்களுடன் பணிபுரிந்த பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாகப் பேசத் தொடங்கினார்கள். இந்த இயக்கம் பெரிய அளவில் விரிவடைந்ததை அடுத்து, கடந்த 10 அக்டோபர் 2018 அன்று தேசியப் பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை தொடர்பான புகார்களைத் தேசிய பெண்கள் ஆணையத்துக்குப் புகாராகத் தெரிவித்து சட்டப்படியான நடவடிக்கைகளை ஆணையத்தின் வழியாக எடுத்துச் செல்லலாம் என்று அதன் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆணையத்துக்குப் புகார்கள் குவிந்ததாகத் தெரிகிறது. 

#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா?

தற்போது மத்திய தகவல் ஆணையம் இந்த  #MeToo விவகாரத்தைத் தேசிய பெண்கள் ஆணையம் அலட்சியமாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. அதில்,``தேசிய பெண்கள் ஆணையம் #MeToo தொடர்பான புகார்களை சட்டப்படி தங்களுக்கு அஞ்சலாகவோ அல்லது அலுவலகத்துக்கு நேரடியாகவோ வந்து புகாராகத் தெரிவிக்கலாம் என்றார்கள். புகார்கள் வந்ததை அடுத்து அவர்கள் அதில் தபால்காரர்கள் போன்ற வேலையில்தான் ஈடுபட்டுவருகிறார்கள். தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அங்கு பணியில் இருந்த பெண் அண்மையில் பெண்கள் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருந்தார். ஆனால், ஆணையமோ அந்தப் புகாரை அப்படியே அந்த மத்திய அரசு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. இதைச் செய்வதற்கு எதற்குப் பெண்கள் ஆணையம், தபால்காரர் போதாதா? பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்தை அலட்சியமாகக்

#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா?

கையாளுகின்றது” என்று கூறியிருக்கிறது. 

மேலும் ``பெண்கள் ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவர்கள் ஊடகங்களின் வழியாகப் பகிரப்படும் தகவல்களையே புகார்களாகக் கருதி பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கலாம். ஏன் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

``இப்படியான புகார்களில் அரசு உயரதிகாரிகள் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்படும் நிலையில் அரசுப் பணிகளில் உயரிய பதவிகளில் தொடரக் கூடாது. அதுவே அரசின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு உறுதி செய்யும்” என்றும் மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

தகவல் ஆணையத்தின் குற்றச்சாட்டு தொடர்பாகத் தேசிய பெண்கள் ஆணையம் இன்னும் எவ்வித பதிலும் தரவில்லை.