Published:Updated:

"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

Published:Updated:
"மகளை, சாதியின் சொத்தாகப் பார்ப்பதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்குது!"

கெளசல்யா - சங்கர், அம்ருதா - பிரனய் என ஆணவப் படுகொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் என்கிற இளைஞரும் அவருடைய காதல் மனைவி சுவாதியும் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. நித்திஷ், பட்டியலினச் சாதியிலும் சுவாதி ஆதிக்கச் சாதியிலும் பிறந்தவர்கள். சுவாதியின் தந்தை தரப்பினரே, இருவரையும் நம்ப வைத்து, ஏமாற்றி அடித்துக்கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வேங்கடேசன், கிருஷ்ணன் ஆகியோரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, இதுபோன்ற ஆணவக் கொலைகளுக்கு நீதி கிடைக்கச் செயல்பட்டு வரும், எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம்.

``ஓசூரில் நித்திஷ் - சுவாதியின் ஆணவக் கொலை பயங்கரமான அதிர்ச்சியா இருக்கு! சுவாதியுடைய அப்பாவையோ, பெரியப்பாவையோ பார்த்தீங்கன்னா ரொம்ப ஏழ்மையானவங்க மாதிரிதான் இருக்காங்க. சாப்பிட சாப்பாடு இல்லை, தங்க இடம் இல்ல, உடுத்துறதுக்கு நல்ல உடை இல்ல. ஆனாலும், அவங்கக்கிட்ட அவங்களுடைய சாதி இருக்கு... எவ்வளவு பெரிய வன்மம் இருக்குன்னு பாருங்க! நமக்கான அடிப்படைத் தேவையா இருக்கக்கூடிய உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் எங்களுக்கு முக்கியமில்ல, ஆனா, என் சாதி முக்கியம்னு நினைக்கிறாங்க. பொதுவா, இந்த மாதிரியான ஆணவக் கொலைகளைச் செய்றவங்க பொருளாதாரத்தில் வசதியான இடத்தைச் சேர்ந்தவங்களாக இருப்பாங்க, இல்லைன்னா பார்க்குறதுக்கே வலிமையானவங்களா இருப்பாங்கன்னு சொல்வாங்க. அப்படியான எந்த அடையாளத்தையும் சுவாதியுடைய அப்பாகிட்ட நீங்க கண்டுபிடிக்க முடியாது. அப்படியிருந்தும் பெத்த மகளைக் கொல்கிற அளவுக்கு அவர் இருந்திருக்காருன்னா இதைத் தனிப்பட்ட பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. `உன் பொண்ணு வேற ஒரு சமூகத்தைச் சேர்ந்தவங்களோடு ஓடிப் போயிட்டா...' `போயும் போயும் அந்தச் சாதிப் பையனையா, உன் பொண்ணு கல்யாணம் பண்ணியிருக்கு'னு சுற்றி உள்ளவங்க கேட்கிற கேள்விகள்தான் இந்த மாதிரியான கொலைகளுக்கு அடிப்படையான காரணம்.

இது, சாதி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல... பாலினப் பிரச்னையும்கூட! மகளுடைய உடலை அவங்க சாதியுடைய சொத்தா பார்க்குறாங்க. என் பொண்ணுக்கு, என் சாதியைச் சேர்ந்த பையனுக்குத் திருமணம் செஞ்சுக் கொடுத்தாதான் தன் சாதி காப்பாற்றப்படும்னு நினைக்கிறாங்க. பொண்ணை, சாதியின் வாரிசாதான் பார்க்கிறாங்க. சாதியினுடைய ரத்தவாரிசு சொத்தாகப் பெண்ணையும் சாதியினுடைய அதிகார வாரிசாகப் பையனையும் பார்க்குறாங்க. இந்தக் குணம்தான் கொலை செய்யும் வன்மத்தைக் கொடுக்குது.

சாதியப் படுகொலைக்கு உறுதியான எந்தச் சட்டங்களும் இன்றளவும் இயற்றப்படவில்லை. சாதிக்கு எதிராக ஆணவக் கொலைகள் செய்றவங்களுக்கு எதிராகச் சட்டங்கள் கொண்டுவர்றோம்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா, அவங்களால் எந்த உடனடிச் சட்டத்தையும் கொண்டுவர முடியலை. இது, பாராளுமன்றத்தில் பேசி உடனடிச் சட்டம் கொண்டு வர வேண்டிய பிரச்னை. கோர்ட்டில் வழக்குத் தொடுக்குறது, அந்த வழக்கு நிலுவையிலேயே இருக்கிறதுன்னு அது நீண்டு போய்ட்டு மட்டும்தான் இருக்குது.

எப்பவுமே துரத்தலுக்கு பயந்தே வாழணுமா? அவங்களுடைய வாழ்க்கையை அவங்களே முடிவுபண்ணி வாழுறதுக்குக் கூடவா இன்னும் இந்தச் சமூகத்துல உரிமை கொடுக்கப்படலை. முதல்ல ஒரு ஆணவப் படுகொலைக்காக தொடுக்கப்பட்ட வழக்கிற்கே கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு தான் தீர்ப்புக் கிடைக்கும்னா அதுக்கிடையில் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள் நடந்துடுது. 

கட்சிக்காரங்க எல்லோரும் இதைச் சமூகப் பிரச்னையாகவே நினைக்கிறது கிடையாது. இப்போ வரை, இந்தக் கொலைக்கு எதிரா எந்தத் தகவலும் அரசு தரப்பிலிருந்து வரல. இந்த மாதிரியான பிரச்னைகளைப் பற்றி எல்லாருமே இரண்டு வாரம் பேசுவாங்க. அவ்வளவுதான்! அதுக்கப்புறம் வேற ஒரு பிரச்னையை நோக்கிப் போயிடுவாங்க. அப்படியெல்லாம் போகக் கூடாதுங்க. முதல் பிரச்னைக்கே சரியான முடிவு கிடைக்கலைங்குறப்போ கடைசியா இருக்கிற பிரச்னையைப் பற்றி மட்டும் பேசுறது எந்த வகையில் பொருத்தமா இருக்கும். அந்தப் பிரச்னை கூடவே பயணிச்சிட்டு இருக்கிற எனக்கு இது ரொம்பவே வலியாக இருக்கு!" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் எவிடன்ஸ் கதிர்.

சாதிய ஒழிவதன் முதல் படி, சாதி ஆணவமும் ஆணவக்கொலைகளும் முடிவுக்குவர வேண்டும்.