Published:Updated:

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை

கல்வி அறிவில் முன்னணியில் இருக்கும் கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் மீது பாலியல் கொடுமை நடந்துள்ள அவலம் அரங்கேறியிருக்கிறது.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை

ல்வியறிவில் முன்னோடியாக இருக்கும் கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் ஆண்டுதோறும் பாலியல் கொடுமை குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டின்  ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான கொடூரம் அரங்கேறியிருக்கிறது. 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு!

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை

கடவுளின் தேசமான கேரளாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அனைத்து விவகாரங்களையும் கூர்மையாகச் சிந்தித்துச் செயலாற்றும் மக்கள் வசிப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் அந்த மாநிலத்தின் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கேரளாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது தெரிய வந்திருக்கிறது.

அதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள தகவல் வெளியாகி இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 10 வருடங்களாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இது குறித்து அரசியல் கட்சிகளோ, மனித உரிமை அமைப்புகளோ கவனம் செலுத்தாமலும் அதற்கான காரணிகள் பற்றி ஆராயாமலும் இருப்பது கூடுதல் வேதனை தருவதாக உள்ளது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.  

கேரள மாநில காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 10 வருடங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 600 சதவிகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-ம் வருடம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைக்காக 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2017-ம் வருடத்தில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 

குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரங்களின்படி, கேரளா முழுவதும் நடந்த சாதாரணக் குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை சில வருடங்களில் குறைந்திருக்கிறன. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரம் தொடர்பான வழக்குகள் மட்டும் எந்த வருடத்திலும் குறையாததுடன், ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அவலத்தைப் பார்க்க முடிகிறது. 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 2013-ம் வருடம் கேரளாவில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 1,016 வழக்குகள் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2015-ம் ஆண்டு 1,589 வழக்குகளாக அதிகரித்தது. தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்ததால் 2008-ம் ஆண்டு 549 என்ற எண்ணிக்கையில் இருந்த குற்றச்செயல்கள் 600 சதவிகிதம் உயர்ந்து கடந்த ஆண்டில் (2017) 3,478 என அதிகரித்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. 

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை!

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை

இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ’’பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள்  தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் 360 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் மட்டும் 600 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தற்போது புகார் அளிக்க முன்வருவதும் ஒரு காரணம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், இத்தகைய குற்றங்களைக் குறைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் வேதனையுடன்.  

இதுபற்றி பேசும் கேரள எழுத்தாளர்கள், ’’கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு சமூகக் காரணிகளே முக்கியக் காரணம். கேரளாவில் ஆணாதிக்க மனோநிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களுக்குமான சமூகக் காரணங்களை ஆராயாமல் அனைத்தையுமே  அரசியலாக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு சில நேரங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கும் அவலமும் நடக்கிறது. இந்தச் சூழலை மாற்றினால் மட்டுமே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறையும்’’ என்கிறார்கள். 

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்கள் தங்களின் கணவன் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சோகம் நடக்கிறது. இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் மட்டும் 589 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. சராசரியாகத் தினமும் 19 குழந்தைகள் பாலியல் ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவலம் நடப்பதால் கேரளா முழுவதிலும் பெண்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை

வருடம்           குற்ற எண்ணிக்கை       பாலியல் குற்றங்கள்
2008                                      549                                                215
2009                                      589                                                235
2010                                      596                                                268
2011                                     1,495                                              423
2012                                     1,324                                              455
2013                                      1,877                                             637
2014                                      2,391                                             754
2016                                      2,881                                             958
2017                                      3,478                                            1,101
2018 (அக்டோபர் வரை)  3,278                                           999.

இந்தச் சமூக அவலத்தின் கொடுமையில் இருந்து மீள என்ன செய்யப்போகிறது, கடவுளின் தேசம்?